Veera Serial: வீரா மீது வந்த காதல், சம்மதம் சொன்ன அம்மா.. ராமச்சந்திரன் முடிவு என்ன? வீரா சீரியல் அப்டேட்!

Veera Serial Today June 26th: அவனை நம்பாத வள்ளி ஊத சொல்ல, மாறனும் ஊதிக்காட்ட “ஸ்மெல் வராத சரக்கை அடிக்கிறியா?” என்று கேட்கிறாள்.

Continues below advertisement

Veera Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாறனின் பிறந்தநாளை எல்லாரும் மறந்து போக ஏமாற்றத்துடன் கடைக்கு வந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

அதாவது, மாறன் கடைக்கு வர, கடையே திருவிழா கோலத்தில் இருக்க, அவன் உள்ளே வந்ததும் பலூன் வெடித்து பூ கொட்ட, எல்லாரும் வாழ்த்து சொல்லி சர்ப்ரைஸ் செய்கின்றனர். பிறகு கேக் கட் செய்யப்போகும் சமயத்தில் ராமசந்திரன் அங்கு வர “இவனுக்கு எல்லாம் எதுக்கு இது?” என்று கேட்கிறார். 

வீரா "அவர் உங்க பையனா, உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் எங்களோட வேலை செய்யுற ஒருத்தர். நம்ம கடையில் வேலை செய்றவங்களுக்கு பிறந்தநாள் வந்தா வழக்கமா கொண்டாடுறது தானே?” என்று பேசி ராமச்சந்திரனை பேச விடாமல் செய்கிறாள். 

அடுத்து கேக் வெட்டி எல்லாருடனும் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடும் மாறன், அம்மாவின் சமாதிக்குச் சென்று வீரா தனக்காக பிறந்த நாள் கொண்டாடிய விஷயத்தை சொல்கிறான். அவள் மேல் காதல் இருப்பதை சொல்லி அம்மாவிடம் அனுமதி கேட்க, மழை பெய்ய தொடங்க மாறன் அதை சம்மதம் என்று எடுத்து கொள்கிறான். 

அடுத்து வீட்டுக்கு வந்த மாறன் கடையைப் பூட்டி பணப்பையை கொண்டு வந்து அத்தையிடம் கொடுக்க அவள் “நீ ஏண்டா இதெல்லாம் செய்யுற? அப்புறம் பணம் காணாமல் போனா நீ தான் எடுத்தேன்னு சொல்வாரு” என்று திட்டுவதோடு, இன்னைக்கும் குடிச்சிட்டு தானே வந்த என்று கேட்க, மாறன் “இப்போ நான் குடிக்கிறது இல்ல, குடியை விட்டுட்டேன்” என்று சொல்கிறான். 

அவனை நம்பாத வள்ளி ஊத சொல்ல, மாறனும் ஊதிக்காட்ட “ஸ்மெல் வராத சரக்கை அடிக்கிறியா?” என்று கேட்கிறாள். பிறகு ரூமுக்கு வந்த மாறன் “டேய் மாறா குடிக்காமல் இருக்கிறது கூட நல்லா தான் இருக்கு” என்று பேசிக் கொண்டிருக்க, அவனது கை நடுங்கத் தொடங்க, “என்னடா அதுக்குள்ள இப்படி ஆகுது?” என்று தண்ணீரை டம்ப்ளரில் ஊற்றி சரக்கு போல் நினைத்து குடிக்கிறான். 

இதையடுத்து வீராவுக்கு போன் போட்டு  “நான் குடிக்கவே இல்ல” என்று பேச, வீரா “இதையே குடிச்சிட்டு தான் பேசுவ” என்று கிண்டல் அடிக்க மாறன் நேரில் வந்து ஷாக் கொடுக்க, வீராவும் அவனுக்கு டெஸ்ட் வைத்து குடிக்கல என்பதை உறுதி செய்கிறாள். பிறகு மாறன் “இன்னைக்கு புல்லா உன் கூட இருக்கப் போறேன்” என்று, அவளது ஆட்டோவை பின்தொடர்ந்தபடியே செல்கிறான். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola