தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் ரூபஸ்ரீ மயக்க மாத்திரை கலந்த தீர்த்தத்தை தீபா குடித்து மயக்கம் வருவதாக சொல்ல, கார்த்திக் உங்களால் பாட முடியும் என்று நம்பிக்கை கொடுத்து மேடையில் உட்கார வைத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது தீபா பாடுவதற்கு தயாராக, திடீரென பாம் ஸ்குவாட் என்ற பெயரில் சிலர் மண்டபத்திற்குள் வந்து இங்கே பாம் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. அதனால் சோதனை செய்ய வேண்டும் என்று சொல்ல, கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். 


இளையராஜா ஏற்கெனவே நாங்கள் இரண்டு முறை எல்லாத்தையும் சோதனை செய்து தான் இங்கே கச்சேரியை ஏற்பாடு பண்ணி இருக்கோம் என்று சொல்லியும் அவர்கள் “எங்களுக்குத் தகவல் வந்திருக்கு எங்களது வேலை செய்ய விடுங்க, எல்லாரும் வெளியே போங்க” என்று வெளியே அனுப்பி வைத்துவிட்டு மண்டபம் முழுவதும் சோதனை இடுகின்றனர்.


ஆனால் கடைசியில் பாம் எதுவும் இல்லை என்று சொல்லி வெளியே செல்கின்றனர். அடுத்ததாக உள்ளே வந்து பார்க்க, அரங்கத்தில் ஒருவர் கூட இல்லாமல் காலியாக இருக்க, “கார்த்திக் நீங்க பாடுங்க தீபா, எல்லாரும் கண்டிப்பா வருவாங்க” என்று சொல்லி பாட உட்கார வைத்து இளையராஜாவிடம் ஸ்பீக்கரை வெளியே வைக்கச் சொல்கிறான். 


அதன் பிறகு தீபா பாடத் தொடங்க, “இந்தக் குரலுக்கு தானே எல்லாரும் வந்திருந்தோம்” என்று வெளியே சென்ற அனைவரும் மீண்டும் உள்ளே வரத் தொடங்குகின்றனர். தீபா டிவியில் பாடுவதைப் பார்க்க அபிராமி அருணாச்சலம் ஆகியோரும் சந்தோஷப்படுகின்றனர்.  இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Raayan: தனுஷின் 50 ஆவது படம் ‘ராயன்’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு!


Vanangaan Teaser: சர்ச்சையை கிளப்ப தயாரான பாலா.. அருண் விஜய்யின் “வணங்கான்” டீசர் இதோ!