சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் கடந்த வாரம் குணசேகரன் வீட்டுப் பெண்களுக்கு எதிராக குணசேகரன் போலீசில் கொடுத்த வழக்கால் அவர்களை நீதிமன்றக் காவலில் வைத்து கடுமையாக விசாரித்து வருகின்றனர் போலீஸ் தரப்பினர். ஜீவானந்தம் தான் தர்ஷினியை சொத்துக்காக கடத்தி வைத்திருக்கிறார் என்றும் அவருக்கு இந்த நான்கு பெண்களும் உடந்தை என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார்.


 




ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா தனக்காக போலீசிடம் படும் சித்திரவதையை தாங்கி கொள்ள முடியாத ஈஸ்வரி, அவர்களை எப்படியாவது வெளியே அனுப்பி விட வேண்டும் என்பதற்காக ஜீவானந்தம் உதவியை நாடுகிறாள். பெண்களுக்கு ஆதரவாக கோர்ட்டில் வாதாட சாருபாலா வருகிறார்.

யாருமே எதிர்பார்க்காத விதமாக தர்ஷினி வீடியோ மூலம் வந்து ஈஸ்வரி தான் அவளைக் கடத்தி வைத்திருப்பதாக வாக்குமூலம் கொடுக்க, அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அப்போது “ஆமாம் நான் தான் காரணம், இவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என ஈஸ்வரி மற்ற மூவரையும் வெளியில் அனுப்புவதற்காக சொல்கிறாள். நீதிபதியும் ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினியை ஜாமீனில் விடுவிக்க உத்தரவு அளிக்கிறார். ஜீவானந்தத்தையும், ஈஸ்வரியையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடுகிறார்.

வீட்டுக்கு மனைவியுடன் வந்த தம்பிகளைப் பார்த்து மிகவும் ஆணவமாக என்னுடைய உதவி இல்லாமல் இவர்கள் எப்படி வாழ்கிறார்கள் எனப் பார்க்கிறேன் என சவால் விடுகிறார். இது தான் கடந்த வாரம் எதிர்நீச்சலில் ஒளிபரப்பான கதைக்களம்.


 




அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அடிபட்டு வந்த மனைவிகளை மிகவும் அன்புடன் பார்த்து கொள்கிறார்கள் குணசேகரன் தம்பிகள். அப்போது "இவர் பார்த்த வேலையா இருந்தா போலீசை நம்பி இருக்குறது வேஸ்ட்" என குணசேகரனைப் பற்றி சொல்கிறான் சக்தி. அதற்கு ஜனனி "இதை விட பவர்ஃபுல்லான இடத்துக்கு போகணும்" என்கிறாள். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியுடன் அவளை பார்க்கிறார்கள்.


 





அடுத்த நாள் அனைவரையும் நிற்கவைத்து குணசேகரன் பேசுகிறார். "உங்க பிள்ளைங்க எல்லார் பேர்லயும் அந்தக் கிழவி சொத்தை எழுதி வைச்சுட்டு போயிருக்கா. அதை எல்லாத்தையும் எங்கிட்ட கொடுத்துருங்க" என அடாவடித்தனமாக பேசுகிறார் குணசேகரன். தம்பிகளும் அவர்களின் மனைவிகளும் இதைத்தானே நீ எதிர்பார்த்த என எக்ஸ்பிரஷன் கொடுக்கிறார்கள். "என்னோட பொண்ணு தர்ஷினி என் அப்பா தான் எல்லாமேன்னு சொல்லுவா" என குணசேகரன் சொல்ல, "அப்போ நீங்க தான் அவளைக் கொண்டு போய் மறைச்சு வைச்சு இருக்கீங்களா?" என ஜனனி கேட்க, அவளை முறைக்கிறார் குணசேகரன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.