தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமியை தேடி குடோனுக்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, அபிராமி பொருட்களால் மூடி வைக்கப்பட்டுள்ள நிலையில் கார்த்திக் அங்கிருந்து வெளியே வரும் போது ஒரு பொருள் கீழே விழ உடனே திரும்பி பார்க்க பூனை ஒன்று கத்த அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறான். 


இதனையடுத்து மீண்டும் பல இடங்களில் அபிராமியை தேடி பார்க்க எங்கும் கிடைக்காததால் வருத்தப்படுகிறான், தீபா ரவுடிகளை பார்த்ததால் அவரை வைத்து எதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கிறான். மறுபுறம் தீபா கட்டுடன் வீட்டிற்கு வர வீட்டில் “என்னாச்சு?” என்று கேட்க நடந்த விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 


பிறகு கார்த்திக் போலீசுடன் வீட்டிற்கு வந்து தீபா நீங்க சில ரவுடிகளை பார்த்தீங்க இல்ல.. அவங்களில் யாராவது இந்த லிஸ்டில் இருக்காங்களானு பாருங்க” என்று போலீஸ் அக்கியூஸ்ட் லிஸ்ட்டை காட்ட, தீபா அதைப்பார்த்து சிலரை அடையாளம் காட்ட ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். 


உடனே ரவுடிகளுக்கு போன் போட்டு “அந்த தீபா உங்களை அடையாளம் காட்டிட்டா உஷாரா இருங்க” என்று வார்னிங் கொடுக்கிறாள். இப்படியான பரபரப்பான கட்டத்தில் இன்றைய கார்த்திகை தீபம் சீரியல் எபிசோடி நிறைவு பெறுகிறது.


மேலும் படிக்க: VJ Adams: அட.. சன் மியூசிக் தொகுப்பாளர் ஆடம்ஸ நியாபகம் இருக்கா.. அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் இதுதான்!


Hotspot: படம் பிடிக்கலனா செருப்பால் அடிங்க.. ஹாட்ஸ்பாட் பட இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் வேதனை!