சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 2) எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. ஃபர்ஹானாவிடம் பாதுகாப்பாக இருக்கும் வெண்பாவை பார்ப்பதற்காக ஈஸ்வரி வருகிறாள். பல நாட்களுக்கு பிறகு ஈஸ்வரியை வெண்பா பார்த்ததும் அவளை வந்து கட்டியணைத்து கொள்கிறாள். மிகவும் கவலையுடன் "அம்மாவுக்கு ஆன மாதிரி அப்பாவுக்கும் ஏதாவது ஆயிடுமோனு பயமா இருக்கு" என வெண்பா சொல்ல அப்படி எல்லாம் சொல்ல கூடாது என ஈஸ்வரி வெண்பாவை சமாதானம் செய்கிறாள்.


 




ஜனனி இன்னும் வராததால் அவளை தேடி போலீஸ் ஸ்டேஷன் ஓடுகிறான் சக்தி. விசாரணைக்காக ஜனனியை அவளுடைய அம்மா வீட்டுக்கு அழைத்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சென்று சக்தி விசாரிக்கிறான். "அவங்களை அங்கேயே விட்டுட்டோமே பா" என இன்ஸ்பெக்டர் சொல்ல சக்தி பதட்டமடைகிறான். "இனிமே உன்னோட பொண்டாட்டி உன்கிட்ட வரமாட்டா" என ராமசாமி சொன்னது சக்திக்கு ஞாபகம் வந்து பதட்டப்படுகிறான்.

தர்ஷினியை கண்டுபிடித்த ஸ்பெஷல் ஆபீஸர் கொன்றவையை சந்திப்பதற்காக அங்கே வரச்சொல்கிறாள். "தர்ஷினி ஏன் அப்பா அப்பா என சொல்லணும்?" என கொன்றவை கேட்க "ஜீவானந்தத்தை தான் அவள் அப்பான்னு சொல்றா" என சொல்கிறாள் ஈஸ்வரி. வெண்பாவுக்கு நடந்த அநியாயம் பற்றி கொன்றவையிடம் சொல்ல அவருக்கு வருத்தப்படுகிறார். இதுதான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 


 


 



நேற்றைய எபிசோடில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து ஈஸ்வரி தர்ஷினியைப் பார்க்க, அவளின் ரூமுக்குச் சென்று ஒரு முறை அவளிடம் பேசுகிறேன் என நர்ஸிடம் கேட்கிறாள். முதலில் ஈஸ்வரி பார்த்து பயப்பட்ட தர்ஷினி பின்னர் மெல்ல மெல்ல "ஜீவா அப்பா ரத்தம் கத்தி" என சொல்லிக் கொண்டே மயங்கி விழுந்து விடுகிறாள்.

உமையாள் கிருஷ்ணாசாமி மற்றும் ராமசாமியை குணசேகரன் வீட்டு வாசலுக்கு வரவழைத்து சித்தார்த் காணாமல் போனதை பற்றி சொல்லி அவனை தேடச் சொல்லி சொல்கிறார். ஜனனியின் சக்தியும் போலீஸ் ஸ்டேஷன் சென்று ஜனனியின் அம்மா தங்கை பற்றி விசாரிக்கிறார்கள். அவர்கள் அங்கு செல்வதற்கு முன்னரே ராமசாமியும் கிருஷ்ணாசாமியும் போலீசிடம் சென்று வீடியோ ஆதாரத்துடன் கம்பளைண்ட் கொடுத்துள்ளார்கள்.


 



ஜனனியின் அம்மாவும் தங்கையும் போலீஸ் ஸ்டேஷனில் இல்லை. அஞ்சனா பேசிய வீடியோவை போலீசிடம் காட்டுகிறாள் ஜனனி. ஆனால் ராமசாமியும் கிருஷ்ணாசாமியும் சக்தி, ஜனனி மீது அனைத்து பழியையும் போட்டு அவளை விசாரிக்க சொல்லி சொல்கிறார்கள்.


விசாரணை செய்த போலீஸ் ஜனனி மீது எந்த ஒரு பிரச்சினையும் இருப்பது போல தெரியவில்லை என்கிறார். அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக ஜனனியின் அம்மா வீட்டுக்கு சென்று சோதனை செய்தால்  ஏதாவது ஆதாரம் கிடைக்கிறதா என பார்க்க முடியும் என சொல்லி போலீஸ் ஜனனியை அழைத்து செல்கிறது. இது தான் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் கதைக்களம்.