கோலாகலமாகத் தொடங்கும் ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் reloaded 2!

கடந்த சீசனைப் போலவே இந்த முறையும் ஆர்.ஜே.விஜய் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, பாபா பாஸ்கர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர்.

Continues below advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தாண்டி சரிகமப, சரிகமப லிட்டில் சேம்ப்ஸ், டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. 

Continues below advertisement

கோலாகலமாகத் தொடங்கிய சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக சமீபத்தில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் அடுத்ததாக டான்ஸ் ஜோடி டான்ஸ் reloaded நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை களமிறக்க உள்ளது. 

வரும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சீசனைப் போலவே இந்த முறையும் ஆர்.ஜே.விஜய் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, பாபா பாஸ்கர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சி கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பக்கா Fun Filled ஷோவாக இருக்கும் என நம்பலாம். 

இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மெகா ஆடிஷனில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நடுவர்களுடன் இணைந்து போட்டியாளர்களை தேர்வு செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆடிஷன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 24 போட்டியாளர்கள் இந்த மெகா ஆடிஷனில் பங்கேற்க உள்ளனர். இவர்களில் இருந்து தேர்வு செய்யப்படும் 12 திறமையான போட்டியாளர்கள் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோ ட்ரைவர், திருமண விழாக்களில் நடனமாடும் பெண், பரதநாட்டியக் கலைஞர், மாற்றுத்திறனாளி என பலதரப்பட்ட வாழ்க்கை பின்னணியைக் கொண்ட பலர் போட்டியாளர்களாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்பது அடுத்தடுத்து வெளியான ப்ரோமோ வீடியோக்கள் மூலமாக தெரிய வருகிறது.

இந்த 12 போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாடப் போகும் 12 பிரபலங்கள் யார் என்பது குறித்த விவரங்கள் முதல் ரவுண்டான அறிமுக சுற்றின் மூலமாக தெரிய வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: Ethirneechal : மனம் மாறிய கதிர்... குணசேகரனை குழப்பிய ஈஸ்வரி... சென்டிமெண்டாக பேசும் கரிகாலன்... எதிர்நீச்சலில் இன்று

Dunki Review : ஹாட்ரிக் வெற்றி அடித்தாரா ஷாருக்கான்..? டங்கி படம் திரைவிமர்சனம்

Continues below advertisement
Sponsored Links by Taboola