சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கரிகாலனுக்கு தர்ஷினியை கல்யாணம் செய்து வைக்க ஜான்ஸிக்கு வாக்கு கொடுக்க தர்ஷினி ஒரு பையனை காதலிப்பதாக சொல்லி குணசேகரனுக்கு ஷாக் கொடுக்கிறாள். குணசேகரன் அந்த பையனை மிரட்டி அனுப்பி வைக்கிறார்.
ஈஸ்வரி தர்ஷினியிடம் விசாரிக்க "அது என்னோட பிரெண்டு மட்டும் தான். அப்பாவை எப்படியாது ஆஃப் செய்ய வேண்டும் என்பதற்காக தான் அப்படி செய்தேன். எனக்கு நிறைய கனவு இருக்கு" என சொல்லி அழ ஜனனி அவளை சமாதானம் செய்து வைக்கிறாள்.
கரிகாலன் நன்றாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்கிறான், அனைவரிடத்திலும் நியாயம் கேட்கிறான். அவன் புலம்புவதை பார்த்த அனைவரும் அவன் மீது பரிதாபப்படுகிறார்கள். சக்திக்கு அவன் மீது இரக்கம் வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கரிகாலன் தர்ஷினி திருமணம் பற்றி பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் போது தர்ஷினி காதலிப்பதாக சொன்ன விஷயம் பற்றிய பேச்சு அடிபடுகிறது. அப்போது ஈஸ்வரி வந்து "அந்த பையனுக்கும் தர்ஷினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என சொல்கிறாள். "ஆத்தாளும் மவளும் மாத்தி மாத்தி பேசுறீங்களா?" என ஆவேசப்பட அந்த நேரத்தில் சக்தி கரிகாலனுக்கு ஆதரவாக பேச "உன்கிட்ட ஈரம் இருக்குயா. உனக்கு நான் சொல்றது புரியுதா... பெயின் பெயின்" என சொல்கிறான்.
வீட்டுக்கு வந்த கதிருக்கு நந்தினி சாப்பாடு கொண்டு வந்து ஊட்டிவிட வருகிறாள். அதை சாப்பிட மறுக்கும் கதிர் "எனக்கு வேண்டாம்னு சொல்றேன்ல" என தள்ளிவிடுகிறான். அப்போது அருகில் இருந்த தாரா "சாப்பிட்டா தானே அப்பா மாத்திரை போட முடியும்" என சொல்லி சாப்பாட்டை ஊட்டி விடுகிறாள். கதிரும் அவள் ஊட்டி விடவும் சாப்பிடுகிறான். அதை நந்தினி பார்த்து ஆறுதல் அடைகிறாள். மகள் அக்கறையுடன் ஊட்டி விடுவதை பார்த்த கதிர் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
குணசேகரனுக்கு எதிராக நின்ற ஜனனியை தொடர்ந்து ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி எதிர்த்து நிற்க தற்போது ஆதிரை வீட்டை விட்டு வெளியேற அடுத்ததாக தர்ஷினியும் போர்க்கொடியை தூக்க ஆரம்பித்துவிட்டாள். இனி குணசேகரன் என்ன திட்டம் எல்லாம் வைத்திருக்கிறார் அதை எப்படி செயல்படுத்த போகிறார்? பெண்கள் அனைவரும் எப்படி இவரை எதிர்க்க போகிறார்கள் என்பதை எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். மீண்டும் பழைய புத்துணர்ச்சியுடன் புதிய பொலிவுடன் பரபரப்பாக நகர்ந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல் என்பதால் ரசிகர்களுக்கு மீதும் ஆர்வம் அதிகரித்துள்ளது.