ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தோட்டத்துக்குப் போன சண்முகத்தைக் கொல்ல மனோஜ் கத்தியுடன் சென்ற நிலையில், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, மனோஜ் சண்முகத்தை குத்தப் போகும் சமயத்தில் ஒரு வாழை மரம் அவன் மீது சாய்ந்து அவன் நகர முடியாமல் போக, ஷண்முகம் மனோஜை தூக்கி விட்டு இது என்னுடைய அம்மா மாதிரி என சொல்கிறான். அடுத்ததாக ஷண்முகம் மற்றும் பரணியை உட்கார வைத்து தாலி பிரித்துப் போடும் சடங்குகள் நடக்க, சௌந்தரபாண்டி சலித்துக் கொள்கிறார்.
பிறகு எல்லாரிடமும் இருவரும் சேர்ந்து ஆசிர்வாதம் வாங்க பாக்கியம் 16 பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என வாழ்த்துகிறாள். பிறகு ரூமுக்கு வந்த பரணி மாலை, அலங்காரம் என அனைத்தையும் களைத்துக் கொண்டு தனது வெறுப்பை வெளிப்படுத்துகிறாள். உள்ளே வந்த ஷண்முகத்திடம் தனக்குள் இருக்கும் கோபத்தை வெளிக்காட்டி வெளியே கிளம்பிச் செல்ல எல்லாரும் பதறுகின்றனர். “அவ எங்க போவான்னு எனக்கு தெரியும், யாரும் பயப்பட வேண்டாம்” என சொல்லி ஷண்முகம் வெளியே கிளம்புகிறான்.
கோயிலுக்கு வந்த பரணி நந்தியிடம் கார்த்தியைப் பார்க்க வேண்டும் என்று வேண்ட, அதை ஷண்முகம் கேட்டு விட்டு அவள் ஆசையை நிறைவேற்ற முடிவெடுக்கிறாள். ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் முத்துப்பாண்டி வெங்கடேஸையும் அவனது அம்மாவை சந்தித்து “ரத்னா எனக்கு தான், அவளை மறந்துடு” என்று சொல்லி மிரட்ட இவர்கள் ஷண்முகம் வீட்டுக்கு வந்து நடந்த விஷயங்களை சொல்கின்றனர்.
அதைக் கேட்ட ஷண்முகம் கோபப்பட்டு அரிவாளை எடுத்துக்கொண்டு முத்துபாண்டியை வெட்டக் கிளம்ப, தங்கைகளும் வைகுண்டமும் அவனைத் தடுத்து நிறுத்த ரத்னா, “முத்துபாண்டியால் வெங்கடேஷூக்கு ஏதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு” என்று வருந்துகிறாள். இதெல்லாம் ஒரே தீர்வு அந்த முத்துபாண்டியை கொள்வது தான் ஆவேசப்படுகிறான். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Killers Of The Flower Moon Review: கருப்புத் தங்கத்துக்காக நிகழ்ந்த கொடூரங்கள்.. ‘கில்லர்ஸ் ஆப் தி ஃப்ளவர் மூன்’ பட விமர்சனம்!