தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.


இந்த சீரியலில் நேற்று மீனாட்சி மற்றும் ரங்கநாயகி ஆகியோர் கோவிலுக்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.அதாவது, கோவிலில் பைரவர் ஹோமம் செய்து கொண்டிருக்க அவர்களுக்கு பின்புறம் மீனாட்சி ஹோமம் செய்து கொண்டிருக்கிறாள்.


ஹோமம் முடிந்து மீனாட்சி சாமி கும்பிடுவதற்காக வரும்பொழுது ரங்கநாயகியும் ஹோமம் நடத்திக் கொண்டிருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டு மீனாட்சி நான் உங்கள் வெள்ளி விழாவிற்கு வர முடியாதபடி எனக்கு உடல்நிலை மோசமாகி விட்டது என்று கூறுகிறாள்.தட்டில் பழங்கள் மற்றும் பொருட்கள் வைத்து மரியாதை சீர் செய்ய அதை கோபத்துடன் ரங்கநாயகி தட்டி விடுகிறாள்.


மேலும் வேண்டும் என்றே உன் மகள் சக்தி விழாவில் ஆள் மாறாட்டம் செய்து கிளம்பி விட்டாள். இது எல்லாம் திட்டமிட்டே செய்தது என்று ரங்கநாயகி கோபத்துடன் மீனாட்சியை திட்டுகிறாள். இனி சக்தி என் வீட்டிற்கு வரக்கூடாது என்று ரங்கநாயகி சொல்கிறாள். வெற்றி சமாதானம் செய்கிறான்.


இதனால் மீனாட்சி யமுனா மற்றும் துர்காவுடன் வருத்தமாக ஆட்டோவில் கிளம்பி வருகிறாள். மீனாட்சி வீட்டுக்கு வருவதற்குள் வெற்றியும் வைத்தியரும் மீனாட்சி வீட்டில் காத்துக் கொண்டிருக்க வெற்றி மீனாட்சியிடம் உங்களின் உடல் நிலையை பற்றி வைத்தியர் சொன்னதால் விழா நடந்ததாக பொய் சொல்லி விட்டதாக சொல்லுகிறான். வைத்தியர் மீனாட்சியை பரிசோதிக்கிறார்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.