தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் கடந்த வாரம் அமுதா அன்னலட்சுமிக்காக வாதாட முடிவெடுத்த நிலையில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, ஆதி கேசவன் அமுதாவிற்கு எதிராக வாதாட, அமுதா அன்னலட்சுமி கொலை செய்யவில்லை என்று வாதாடுகிறாள். இறுதியாக நீதிபதி அமுதாவுக்கு உண்மையை நிரூபிக்க 10 நாள் அவகாசம் கொடுக்கிறார். மாணிக்கம் பழனியை தன்னிடம் சிசிடிவி ஆதாரம் இருப்பதாக வேறு நபர் பேசுவது போல் பேசி மிரட்ட ஆதிகேசவன் நீ போனை எடுக்காதா என்று சொல்கிறார்.
ஆனாலும் பழனி போனை எடுத்து “பணத்தை தரேன் புட்டேஜ் கொடுத்துடுங்க” என்று சொல்ல மாணிக்கம் தனியாக ஒரு இடத்திற்கு வர சொல்ல செந்திலும் மாணிக்கமும் முகமூடி அணிந்து செல்கின்றனர். பழனி அங்கே வந்து பணத்தை கொடுத்து புட்டேஜ் கேட்க இதையெல்லாம் ஒரு கேமரா பேனா மூலமாக ரெகார்ட் செய்கின்றனர்.
ஒரு கட்டத்தில் பழனியின் ஆட்கள் மாணிக்கத்தையும் செந்திலையும் சுற்றி வளைக்கின்றனர். இறுதியில் இவர்கள் தப்பித்து கோர்ட்டில் மண்டபத்தின் சித்வ் புட்டேஜ் சமர்ப்பிக்க, அதில் ஆதாரம் எதுவும் இல்லை என நீதிபதி அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு பேனாவில் ரெக்கார்ட் செய்த ஆதாரத்தை கொடுத்த அது சித்தரிக்கப்பட்டது என கேஸை திசைத்திருப்பி விடுகிறான் ஆதி கேசவன். இதனால் நீதிபதி அன்னத்திற்கு அளிக்கப்பட்ட தண்டனையில் மாற்றம் இல்லை என அதிர்ச்சி கொடுக்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: Animal: ஹிட்லரின் சின்னத்தை பெருமையாக நெஞ்சில் குத்துவதா.. அனிமல் படத்தை வெளுத்த 'தளபதி 68' ஒளிப்பதிவாளர்!