சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (டிச.14)  எபிசோட்டில் கதிர் கண்முழித்து சக்தியைப் பார்த்து அன்பாகப் பேச நந்தினி அவன் திருந்தி விட்டதாக நினைத்து சந்தோஷப்படுகிறாள். ஆனால் பெரும்பாடுபட்டு அவனை காப்பாற்றிய நந்தினியை பார்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தாரா அக்கறையா "வலிக்குதா அப்பா" எனக் கேட்க முகத்தை திருப்பிக் கொள்கிறான் கதிர்.



ஆத்திரமடைந்த நந்தினி "சக்தியுடன் அன்பாக பேசவும் திருந்திவிட்டான் என நினைத்தேன் ஆனால் அவன் திருந்தவே மாட்டான். அவன் பெத்த பிள்ளை தானே...வலிக்குதான்னு தானே கேட்டுச்சு? பதில் சொன்ன என்ன. இவன் எல்லாம் சாகமாட்டான். எல்லாரையும் சாகடிச்சிட்டு தான் சாவான்" என பயங்கரமாக திட்டிவிட்டு வெளியே வந்துவிடுகிறாள்.


 




ஞானத்தையும் சக்தியையும் எங்கும் போகாமல் பக்கத்திலேயே இருக்கச் சொல்கிறான் கதிர். கதிர் வலியால் துடிப்பதை பார்த்து ஞானமும் சக்தியும் கண் கலங்குகிறார்கள். குணசேகரனிடம் தகவல் சொல்லியாச்சு அவர் சீக்கிரமாக வந்து விடுவார் என கதிரிடம் சொல்கிறான் ஞானம்.

மருத்துவமனைக்கு விரைந்த குணசேகரன் கதிர் இருக்கும் அறைக்கு சென்று காச்சு மூச்சு என கத்துகிறார்."கதிரை அடித்தவனை இந்நேரம் போட்டு தள்ளாமல் ஏன் விட்டு வச்சு இருக்க" என ஞானத்திடம் எகிறுகிறார். சத்தம் கேட்டு வந்த நர்ஸையும் குணசேகரன் திட்டி விரட்டி அடிக்கிறார். மருத்துவர் வந்து சமாதானம் செய்து குணசேகரணி வெளியே அனுப்புகிறார்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

"ஒன்னு அந்த எஸ்.கே.ஆர், இல்லனா அந்த ஜீவானந்தம் இவங்க தான் இந்த வேலையை செஞ்சு இருக்கணும் " என கொந்தளிக்கிறார் குணசேகரன். அதை கேட்ட ஈஸ்வரி "ஜீவானந்தம் எதுக்கு செய்யணும்? நீங்க தான் ஆளை விச்சு உங்க தம்பியை அனுப்பி அவரோட பொண்டாட்டியை கொலை பண்ணீங்களோ?" எனக் கேட்க குணசேகரன் உட்பட அங்கிருந்த அனைவருக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது.


 




வீட்டுக்கு வந்த குணசேகரன் யோசனையில் இருக்க மேலும் ஏத்திவிடுவது போல ஜான்சி ராணி குணசேகரனை மேலும் தூண்டி விடுகிறாள்."இந்த வீட்டுக்குளேயே இருந்துகிட்டு சகுனி வேலையை பார்த்துகிட்டு பொம்பளைங்க சுத்திகிட்டு இருக்காளுகளே அவள்களுக்கு முதல்ல ஒரு வழியை பண்ணு" என ஏத்திவிட குணசேகரன் ஜான்சி ராணி பேசியது பற்றி யோசித்துக்கொண்டு இருக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.    


 





கதிரை தாக்கியது யாராக இருக்கும், இது குணசேகரனின் பிளானாக இருக்குமோ என ரசிகர்கள் சந்தேகப்படுகிறார்கள். சக்தியை மறுபடியும் குணசேகரன் தன்னுடைய பக்கம் இழுத்து கொள்ள போகிறாரோ என சந்தேகம் எழுந்துள்ளது. போக போகத்தான் கதைக்களம் எதை நோக்கி பயணிக்கிறது என்பது தெரியவரும்.  

கடந்த சில மாதங்களாக மிகவும் தொய்வாக ஒளிபரப்பான எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் மீண்டும் விறுவிறுப்படைய துவங்கியுள்ளது. விட்ட இடத்தை மீண்டும் பிடித்துவிடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.