Ameer Family : இவங்க ரெண்டு பேரும் தான் என்னுடைய இதய துடிப்பு... அமீரின் நெகிச்சியான தருணம்
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்து மிகவும் பிரபலமானவர் அமீர். பிபி ஜோடிகள் சீசன் 2 எனும் டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெற்றி பெற்றார். அந்த மேடையில் தனது குடும்பத்தாரை அறிமுகம் செய்து வைத்து தருணம் பார்வையாளர்களை நெகிழ செய்தது.
அமீர் - பாவனி காதல் :
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்றுமொரு போட்டியாளரான பாவனி மீது காதல் கொண்டு அதை வெளிப்படையாகவே பல முறை ப்ரபோஸ் செய்தும் இதுவரையில் பாவனி அமீர் காதலை முழுமையாக இதுவரையில் ஏற்கவில்லை. இவர்கள் இருவரும் விஜய் டிவியின் பிபி ஜோடிகள் சீசன் 2வில் ரீல் ஜோடி போட்டியாளராக பங்கேற்று தற்போது டைட்டில் வின்னராகவும் வெற்றிபெற்றுள்ளனர்.
அமீர் குடும்பம் அறிமுகம் :
வெற்றி பெற்ற அமீர் தனது குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தார். ஏற்கனவே அவர் தனது தாய் பற்றியும் அவரின் இறப்பு பற்றியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். தற்போது தனது தாயின் சகோதரியான அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனை அறிமுகம் செய்து வைத்தார். அமீர் தாயின் இறுதி சடங்கிற்கு கூட யாரும் வரவில்லையாம். பெரியம்மா மற்றும் அவர் மகள் மற்றும் அமீரின் அண்ணன் இவர்கள் மட்டுமே இருந்துள்ளனர் என்று சொன்னது அங்கிருந்தவர்கள் இதயங்களை கனக்க செய்தது.
ஓர் அழகிய தருணங்கள்.. ❤️😊 #BB ஜோடிகள் 2 #BBJodigal2 #GrandFinale #BiggBossJodigal2 #VIjayTelevision #VijayTv முழுப்பகுதி -https://t.co/7W3cJRsOn0 pic.twitter.com/FdEVpET8eS
— Vijay Television (@vijaytelevision) September 8, 2022
மீண்டும் அண்ணன் உறவு :
தாயின் இறப்பிற்கு பிறகு நீயும் என் அம்மாவின் இறப்பிற்கு ஒரு காரணம் என்று தனது அண்ணனோடு இதுவரையில் பேசாமல் இருந்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்த பிறகுதான் தன்னுடைய அண்ணனோடு பேச ஆரம்பித்தாராம் அமீர்.
அமீர் அண்ணன் ஒரு டான்சர்:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் ராஜு ஜெயமோகன் அசலில் அமீர் அண்ணன்போல் இருப்பதால் அமீருக்கு ராஜு மீது இனம்புரியாத பாசம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்தவுடன் தனது அண்ணனுடன் பேசியுள்ளார் அமீர். அமீர் தனது அண்ணன் குறித்து கூறுகையில் எனது அண்ணன் என்னை விடவும் எனது அம்மா மீது நடிகர் பாசம் வைத்திருந்தான். என்னடி விடவும் மிக நல்ல டான்சர். ஆனால் தற்போது மூட்டை தூக்கி வருகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு எனக்குள் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனக்கு இப்போதெல்லாம் கோபம் கூட வருவதில்லை என கூறினார் அமீர்.
அஸ்வத் - ஷைஜி குடும்பத்தில் நானும் ஒருவன்:
பிறகு தனக்கு வாழ்க்கை கொடுத்த அஸ்வத் - ஷைஜி குடும்பத்தை பற்றி கூறுகையில் அவர்கள் இல்லை என்றல் நான் இன்று இங்கு இல்லை. வேறு யாருக்கும் இவர்களை போல ஒரு உறவு வேறு யாருக்காவது கிடைக்குமா என்று தெரியாது ஆனால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அலைனா மற்றும் ஐஷு எனது இதய துடிப்பு. அவர்கள் இல்லையென்றால் என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. அஸ்வத் சார் - ஷைஜி மேம் இருவரும் எனக்காக அவர்களின் மொத்த குடும்பத்தையும் தூக்கி போட்டார்கள். நான் இந்த குடும்பத்திற்குள் வந்ததால் அவர்களின் குடும்பத்தோடு பேசி கொள்வது கூட கிடையாது. அஸ்வத் சார் அமீர் குறித்து கூறுகையில் அமீர் எங்கள் வாழ்வில் மிக பெரிய பொக்கிஷம் என்றார். இதை கேட்ட அங்கிருந்த ஒட்டுமொத்த அரங்கமே ஆனந்தத்தில் மிதந்தது எனலாம்.