Captain Movie Review Tamil: நடிகர் ஆர்யாவின் நடிப்பில் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம்  ‘கேப்டன்’. 


கதையின் கரு:


ஒரு குறிப்பிட்ட  வனப்பகுதிக்குள் செல்லும் ராணுவவீரர்கள் அடுத்தடுத்து உயிரிழக்கிறார்கள். அதற்கான காரணத்தை கேப்டன் ஆர்யா தலைமையிலான குழு கண்டுபிடிக்க காட்டுக்குள் இறங்குகிறது. அப்போது ஏலியன்கள் படையெடுத்து நிற்க, அந்த ஏலியன்களுக்கு அங்கு என்ன வேலை..? அந்த ஏலியன்களை ஆர்யாவின் படை எப்படி எதிர்கொள்கிறது.?  இறுதியில் ஜெயித்தது யார் என்பதே கேப்டன் படத்தின் கதை.


 


                             


 ‘சார்பட்டா பரம்பரை’,  ‘டெடி’ படங்களுக்கு பிறகு ஆர்யாவிற்கு நல்லதொரு படமாக வந்திருக்கிறது ‘கேப்டன்’. கேப்டனாக வரும் ஆர்யாவின் ஃபிட்னஸ் அந்தக் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறது. ஆக்சன், காதல் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கும், ஆர்யா எமோஷன் சம்பந்தமான காட்சிகளில் தடுமாறுகிறார்.




நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு வழக்கம்போல ஒரு பாட்டு, கொஞ்சம் சீன்ஸ். ஆனாலும் அவரின் அழகு நம்மை ரசிக்க வைக்கிறது. கொடுக்கப்பட்ட நெகட்டிவ் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் நடிகை சிம்ரன். ஆர்யாவுடன் வரும் இதர கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயன்றிருந்தாலும், அவை எதுவும் பெரிதாக வொர்க் அவுட் ஆக வில்லை. 




படத்தை பார்க்க வரும் ஆடியன்ஸூக்கு எப்போதும் ஒரு புது அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு படத்திற்குள்ளும் ஏதாவதுதொரு சுவாரசியத்தை புகுத்தும் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன், இந்தப்படத்தில் ஏலியனை கையில் எடுத்து இருக்கிறார். முயற்சிக்கு முதலில் பாராட்டுகள். அடுத்த பாராட்டு விஎஃப் எக்ஸ் டீமுக்கு.  ஏலியன்கள் சம்பந்தமான காட்சிகளை முடிந்த வரை, எவ்வளவு தத்ரூபமாக காட்ட முடியுமோ, அந்த அளவிற்கு காட்டி இருக்கிறார்கள். 



படத்தின் பெரும் பலம் படத்தின் திரைக்கதை. முடிந்த அளவு போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். படத்தின் ப்ளாட் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ட்ராவல் செய்வது படம் சுவாரசியமாக இருந்தாலும், அது ஆடியன்ஸை ஒரு தொய்வு நிலைக்கு அழைத்து செல்கிறது. பாடல்களிலும், பின்னணி இசையிலும் டி இமானின் முத்திரை இல்லை. காஷ்மீரை கனகச்சிதமாக கேப்சர் செய்திருக்கிறது யுவாவின் கேமாரா கண்கள்.