பாக்யலட்சுமி சீரியலில் காணாமல் போன இனியாவை பாக்யா தேடும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 


இனியாவை தேடும் பாக்யா 


இனியா ஸ்கூலில் இருந்து குறித்த நேரத்தில் வீடு திரும்பாததால் பாக்யா உள்ளிட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைகின்றனர். டிரைவரும் அவள் பள்ளி முடியும் நேரத்தில் பஸ்ஸில் ஏறவில்லை என கூறியதால் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கின்றார். ஈஸ்வரி இதுதான் சான்ஸ் என்று பாக்யாவை கோபி இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா என கேட்டு திட்ட மூர்த்தியும், ஜெனியும் அவரை பயம் காட்டாமல் இருக்குமாறு தெரிவிக்கின்றனர். உடனே மூர்த்தி எதுக்கும் ஸ்கூல்ல போய் பாத்துட்டு வா என தெரிவிக்கிறார். 


இதனையடுத்து செல்வியும்,பாக்யாவும் பள்ளிக்கு செல்கின்றனர். அங்கு வாட்ச்மேன் எல்லாரும் போய்ட்டாங்க. உள்ளே யாருமே இல்லன்னு சொல்ல அதை கேட்க மறுத்து உள்ளே சென்று பார்க்க வேண்டும் என இருவரும் வாக்குவாதம் செய்கின்றனர். உடனே அங்கு வரும் டீச்சர் ஒருவர் இனியா வீட்டுக்கு செல்வதை தான் பார்த்ததாக கூறுகிறார். இதனால் பாக்யா, செல்வி இருவரும் அங்கிருந்து செல்கின்றனர். பின்னர் வீட்டுக்கு வரும் வழியெங்கும் தேடி அலைகின்றனர். இனியா கிடைக்காததால் வீட்டுக்கு சென்று பார்க்கலாம் என முடிவெடுக்கின்றனர். 


செழியனிடம் தகவல் சொல்லிய கோபி


கோபியுடன் வெளியே செல்லும் இனியா தன்னை உடன் கூட்டிச்செல்லுமாறு கூறுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடையும் கோபி தான் இப்போது ஹோட்டலில் தங்கியிருப்பதால் விரைவில் வீடு பார்த்து கூட்டிச் செல்கிறேன் என உறுதியளிக்கிறார். பின் செழியனுக்கு போன் செய்து இனியா தன்னுடன் இருப்பதாக வீட்டில் சொல்லுமாறு, அவளை காணாமல் தேடுவார்கள் எனவும் தெரிவிக்கிறார். ஆனால் வீட்டுக்கு வரும் செழியனிடம் ஜெனி இனியா காணாமல் போனதாக கூற அவரோ கூலாக அவள் வருவாள் என சொல்கிறார். பின்னர் ஈஸ்வரியிடம் மட்டும் கோபியுடன் இனியா இருப்பதாக கூறுகிறார். மற்ற யாருக்கும் இதனை அவர் சொல்லவில்லை 


மீண்டும் வீட்டுக்கு வரும் கோபி


இனியாவை தேடி வீட்டுக்கு வந்த பாக்யாவிடம் வாசலிலேயே நிற்கும் ஜெனி அவள் வரவில்லை என கூறுகிறார். இதனால் பாக்யா அழுது புலம்பி கொண்டிருக்க அந்நேரம் பார்க்க கோபி இனியாவுடன் வீட்டுக்கு வருகிறார். அவரை கண்டு ஜெனி, பாக்யா, செல்வி 3 பேரும் அதிர்ச்சியடைகின்றனர். உடனே ஜெனி இனியாவை சொல்லாமல் போகலாமா என திட்டுகிறார். அவரை சமாதானப்படுத்தும் கோபி, ஏன் இனியாவை திட்டுகிறாய் என கேட்கிறார். நீங்கள் வீட்டில் இருந்து இனியா காணாமல் போனால் சும்மாவா இருப்பீர்கள் என ஜெனி கேள்வியெழுப்ப பதில் சொல்ல முடியாமல் கோபி திகைக்கிறார். உடனே இனியா எனக்கு அப்பாவை பார்த்ததும் போன் பண்ண மறந்துட்டேன். அதனால நான்  சொல்லல என கூறுகிறார். இத்தோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.