மறைந்த இயக்குநர் மாரிமுத்து குறித்து பிரபல நடிகை விஜி சந்திரசேகர் பல தகவல்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுளார். 


மறைந்த இயக்குநர் மாரிமுத்து


தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்த மாரிமுத்து சினிமாவில் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையை தொடங்கினார். நடிகர் ராஜ்கிரண், இயக்குநர்கள் மணிரத்னம்,வசந்த்,எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து மன்மதன் படத்தில் இணை இயக்குநராக இருந்த மாரிமுத்து,  இயக்குநராக கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 


தொடர்ந்து நடிகராக ரசிகர்களிடத்தில் பரீட்சையமான அவர், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இந்நிலையில் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி மாரிமுத்து உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ச்சியாக மாரிமுத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன. 


எதிர்நீச்சலில் நடிக்க காரணமே நான் தான்


மாரிமுத்து மரணம் நிகழ்ந்தது அனைவருக்கும் ரொம்ப அதிர்ச்சியாகவே உள்ளது. அவரின் தோற்றம், கணீர் குரல், வசன உச்சரிப்பு எல்லாம் என்னை சுற்றி வருவது போல இருக்குது. ஆரோகணம் படத்தில் நானும், மாரிமுத்துவும் தான் முதன்மை கேரக்டரில் நடித்தோம். அப்ப தான் அவரை முதன்முதலாக பார்த்தேன். அதற்கு முன்னால் இயக்குநராக கேள்விப்பட்ட நிலையில், ஒரு நடிகராக மாரிமுத்துவை வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய உடல் மொழி உள்ளிட்ட அனைத்தும் சிறப்பான பெர்பார்மன்ஸை வெளிக் கொணர்ந்தது என்றே சொல்லலாம். 




மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க விதைப் போட்டது நான் தான். வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என கடுமையாக உழைப்பார். ஒரு கட்டத்தில் அந்த சீரியல் டாபிக் வரும் போது நான் பண்ணுங்க சார் என சொன்னேன். முதலில் தினமும் ஒளிபரப்பாவதால் அடிக்கடி வெளியூர் சென்றால் சீரியல் ஷூட்டிங்கிற்காக வர வேண்டும், சீரியல் பண்ணா படங்களில் வாய்ப்பு கிடைக்காது என சில விஷயங்களால் மாரிமுத்து எதிர்நீச்சல்  சீரியலில் நடிக்க தயங்கினார். 


நான் தான் அப்படியெல்லாம் கிடையாது. நாம் குணச்சித்திர நடிகர்கள் என்பதால் வாய்ப்புகள் நம்மை தேடி வரும். முன்னணி நடிகர்களுக்கு வேண்டுமானால் நீங்கள் சொல்லும் அந்த பிரச்சினை வரலாம் என சொன்னேன். எதிர்நீச்சல் சீரியல் பேசப்பட்ட போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.  ஒரு 6 மாதத்திற்கு முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த போது கூட, நீங்க சொன்ன மாதிரி பட  வாய்ப்புகள் குறையவே இல்லை. என்னோட மகிழ்ச்சியில உன்னோட பங்கும் நிறைய இருக்கு என சொன்னார். எனக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னால் மாரிமுத்து எதிர்நீச்சலில் நடிச்ச ஆதி குணசேகரன் கேரக்டரில் யாரையும் பொருத்தி பார்க்க முடியவில்லை. 




மேலும் படிக்க: Rajinikanth: ’என்னை பார்த்தாலே அந்த ஒரு நொடி ரஜினி பயப்படுவார்’ .. ராதிகா சொன்ன சீக்ரெட் என்ன தெரியுமா?