சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினி மிகவும் சந்தோஷமாக தனது மாமியார் மற்றும் ஆதிரையை அழைக்கிறாள். அந்த நேரம் பார்த்து கரிகாலன் வர பின்னாடியே ஞானமும், கதிரும் மாடியில் இருந்து இறங்கி வருகிறார்கள். "இதுங்க எதுக்கு வருதுங்க" என முணுமுகிறார்கள் நந்தினியும் ரேணுகாவும்.
கரிகாலன் அந்த பையில் "என்ன பிரசாதமா?" என பையை எடுக்க வர அதை மடக்கென எடுத்து விடுகிறாள் நந்தினி. விசாலாட்சி அம்மா "இது பொம்பளைங்களுக்கான பிரசாதம் இதை நீ பார்க்கக்கூடாது. பார்த்தா கபோதியா ஆயிடுவ" என மிரட்ட கரிகாலன் இல்ல எனக்கு வேண்டாம் கண்ணு தான் ஹனிமூனுக்கு முக்கியம் என சொல்லி ஒதுங்கி விடுகிறான்.
அவர்கள் அனைவரும் சென்ற பிறகு நந்தினி விசாலாட்சி அம்மாவிடம் ஆசீர்வாதம் பெற்று சம்பளமும் அட்வான்ஸும் கொடுத்ததை பற்றி சொல்லி அவள் வாங்கி வந்த ஸ்வீட்டையும் கும்பகோணம் வெத்தலையையும் கொடுக்கிறாள். ஆதிரைக்கு வாங்கி வந்த லிப்ஸ்டிக் கொடுக்கிறாள். திரும்பவும் கரிகாலன் வந்து அந்த பிரசாதம் பற்றி கேட்க விசாலாட்சி அம்மா விரட்டி விடுகிறார். மீனாட்சி அம்மனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறாள்.
ஈஸ்வரி ஒரு ட்ரஸ்டில் பெண்களுக்கு மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுப்பதற்காக ஒரு சென்றுள்ளாள். "இங்கு இருக்கும் பெரும்பாலான பெண்கள் குடிக்கு அடிமையான கணவர்களால் வாழ்க்கையை இழந்த விதவை பெண்கள். இவர்களின் திறமை வெளியில் வரவேண்டும். நாங்கள் அவர்களுக்கு எவ்வளவு எடுத்து சொன்னாலும் வேலை வாங்குவதற்காக அப்படி சொல்கிறோம் என அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் நீங்கள் தான் அவர்களின் கூண்டுக்குள் இருந்து வெளிவர மோட்டிவேட் செய்ய வேண்டும்" என டிரஸ்ட் நிர்வாகி ஒருவர் ஸ்வ்ரியிடம் சொல்கிறார்.
ஈஸ்வரி பேசுகையில் "இவர்களை விடவும் தன்னம்பிக்கையை இழந்து சமையலறையிலேயே முடங்கி போய் இருந்தேன். திருமணத்திற்கு பிறகு என்னுடைய வாழ்க்கையே முடிந்து விட்டது இனிமேல் என்னால் எதுவும் செய்ய முடியாது என முடங்கி போய் இருந்தேன். என்னாலேயே அதில் இருந்து வெளிவர முடியும் என்றால் இவர்களால் நிச்சயமாக வெளியில் வர முடியும்" என சொல்கிறாள்.
அந்த இடத்தில் வெண்பா வந்து நிற்க ஆச்சரியப்படுகிறாள் ஈஸ்வரி. ஜீவானந்தம் அந்த ட்ரஸ்டுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார் என சொல்கிறார்கள். வெண்பா ஈஸ்வரியை அப்பா வர வரும் வரைக்கும் இருக்க சொல்கிறாள். பிறகு தர்ஷன், ஈஸ்வரி, ஜீவானந்தம் மற்றும் வெண்பா ஒரு டீ ஷாப்பில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
"வீட்டில் அப்பா உங்களை பற்றி தப்பாக பேசும் போது எனக்கும் கோபம் வந்ததது ஆனால் உங்களை நேரில் பார்த்தால் வேற மாதிரி இருக்கீங்க. ரொம்ப ஹம்பிளாக இருக்கீங்க" என சொல்கிறான் தர்ஷன். "இதை சமுதாயத்துக்கு நல்லது செய்யும் எண்ணத்தில் தான் செய்கிறேன். அது சிலருக்கு தப்பாக இருக்கலாம். நான் யாரையும் கஷ்டப்படுத்தியது கிடையாது. வெண்பாவை தான் கஷ்டப்படுத்தி விட்டேன்" என்கிறார்.
"நீங்க என்னை நல்லா பாத்துக்குறீங்க. அம்மாவும் இருந்தா நல்லா இருந்து இருக்கும்" என்கிறாள் வெண்பா.
"தர்ஷன் நீ தான் உன்னுடைய அம்மா, தங்கை, சித்திகளுக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும். இத்தனை நாட்கள் அவர்களின் திறமைகள் வீணடிக்கப்பட்டது" என சொல்கிறார். தர்ஷனும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டு இனிமேல் நான் அவர்களை நன்றாக பார்த்து கொள்வேன் என்கிறான்.
வீட்டுக்கு அப்பத்தா வர அவருக்கு ஸ்வீட் கொடுத்து அவருக்காக வாங்கி வந்த புத்தகத்தை கொடுக்கிறாள் நந்தினி. அப்பத்தா நந்தினியை பாராட்டி இது பத்தாது நீ மேலும் சாதிக்க வேண்டும் என்கிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரியும் தர்ஷனும் வர அவர்களுக்கும் ஸ்வீட் கொடுக்கும்போது ஞானமும், கதிரும் வந்து விடுகிறார்கள். மாடியில் இருந்து குணசேகரன் பார்க்கிறார். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்ததது.