சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சின்னத்திரையில் நடித்து விட்டால் வெள்ளித்திரையில் மிகப்பெரிய அளவில் வலம் வரலாம் என நினைத்து வருபவர்கள் ஏராளம்.  ஆனால் பெரிய திரை வாய்ப்பு வந்தால் கூட சீரியலை விட்டு வரமாட்டேன் என சொல்கிறவர்களும் உண்டு. சின்னத்திரையோ, பெரிய திரையோ அதில் நடிக்கும் பிரபலங்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர். இதனால் ரசிகர்களை மகிழ்விக்க அடிக்கடி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 


அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலின் ஹீரோயினான சைத்ரா ரெட்டியும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை தன்னகத்தே கொண்டுள்ளார். கயல் சீரியல் சன் டிவியில் கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோ ஹீரோ, ஹீரோயினாக நடித்து வருகின்றனர். இந்த சீரியல் கே.பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படத்தின் கதையை அடிப்படையாக கொண்டது. இரவு 7.30 மணியளவில் இந்த சீரியலானது ஒளிபரப்பாகி வருகிறது. 






இந்த சீரியலில் இதுவரை கயல் குடும்பத்திற்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விட்டது. தவறாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் உண்மை குற்றவாளியையும் எழில் கண்டுபிடித்து விட்டார். இதனால் ஒட்டுமொத்த மகிழ்ச்சியில் கயல் குடும்பம் உள்ளது. இதன் பின்னணியில் இந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில் கயல் எழிலை சந்திக்க வேண்டும் என சொல்கிறாள். இருவரும் சந்தித்ததும் எழிலிடம் தன் காதலை கயல் ஒப்புக்கொள்கிறார். இருவரும் ஓடி பிடித்து விளையாடும் காட்சிகளும் இடம் பெற்றது. 


அப்போது எதிர்பாராத விதமாக கயல் விபத்தில் சிக்குகிறார். இது தொடர்பான காட்சிகள் இந்த வாரம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் சைத்ரா ரெட்டி விபத்தில் சிக்கும் காட்சிகள் அடங்கிய ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை சமூக வலைத்தளப்பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் காரில் அடிபடும் காட்சிகளும், ஜாலியாக அதில் நடிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. அதில், ‘இதை செய்ய எனக்கு தைரியம் கொடுத்த அனைவருக்கும் நன்றி 🙂’ என சைத்ரா ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது. 




மேலும் படிக்க: Actor Suriya: சாப்பாடு ஊட்டி விட்டார்.. விஜயகாந்தைப் போல யாரும் இல்லை ; கண்ணீர் மல்க பேசிய நடிகர் சூர்யா