நடிகர் பப்லு பிரித்விராஜ், தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் குணசித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்துள்ளார். கடைசியாக இவர் கண்ணான கண்ணே என்ற பிரபல சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து விட்டது.
பிருத்விராஜை, சின்னத்திரை வட்டாரத்தில் பலர் பப்லு என்று அழைப்பது வழக்கம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிம்புவுடன் இவர் செய்த பிரச்சனை இவருக்கு பெரிய அளவில் ரீச்சை பெற்றுத் தந்தது.
அதைத் தொடர்ந்து சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் பிரித்விராஜ்க்கு கிட்டத்தட்ட 57 வயதை நெருங்கியுள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 23 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவர் ஆட்டிசம் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்.
இந்நிலையில் தான் காதலித்து திருமணம் செய்த, தன்னுடைய முதல் மனைவியை பிரிந்து தனியாக பப்லு வாழ்ந்து வருகிறார். மேலும், ஷீத்தல் என்ற 23 வயது பெண்ணுடன் இவருக்கு திருமணம் ஆகி விட்டதாக சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வைரலானது. இதனை அடுத்து யூடியூப் சேனல்கள் சிலவற்றிற்கு பிருத்விராஜ் அளித்த பேட்டியில், எங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் நாங்கள் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறோம் என்று கூறி இருந்தார். மேலும் தனக்கும் ஷீத்தலுக்கும் 30 வயதுக்கு மேலான வயது வித்தியாசம் உள்ளதாகவும் இருவரும் மனதாரக் காதலிப்பதாகவும் கூறி இருந்தார்.
இதனால் சமூக வலைதளங்களில் பிரித்விராஜ் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் மற்றொருபுறம் இந்த ஜோடிக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இவர்கள் இணைந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்த நிலையில், சமூக வலைதளங்களில் பிரபல ஜோடிக்களில் இரு ஜோடியாக இருவரும் உருவெடுத்தனர்.
இந்த நிலையில் சில வாரங்களாகவே இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்து எந்த வீடியோக்களும் வெளியிடவில்லை. இந்த நிலையில் ஷீத்தல் மற்றும் பப்லு இருவருமே தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் தாங்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, நீக்கி உள்ளனர். அதேபோல ஷீத்தல் லேட்டஸ்ட் ஆக, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ரசிகர் ஒருவர் “நீங்கள் பிரிந்து விட்டீர்களா? இப்போது தனியா தான் இருக்கீங்களா?” என்று கேட்ட கேள்விக்கு, ஷீத்தல் லைக் கொடுத்துள்ளார்.
அதே நேரத்தில் நேற்று பப்லுவின் பிறந்தநாள் அவருடைய நண்பர்களால் கொண்டாடப்பட்டிருக்கிறது. அப்போதும் ஷீத்தல் அங்கு இல்லை. இதனால் இவர்கள் இருவரும் உண்மையில்தான் பிரிந்து விட்டார்கள் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Annapoorani Review: சாதிக்கும் துடிப்புடன் கரண்டி பிடித்த நயன்.. அறுசுவை விருந்து படைத்தாரா.. அன்னபூரணி விமர்சனம்!