சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரியை அழைத்துக் கொண்டு சேர்மேன் போஸ்டிங் எலெக்ஷனில் நிற்பதற்கான அறிக்கையை கொடுப்பதற்காக செல்கிறார். அவர்களுடன் ஜனனியும் சக்தியும் செல்கிறார்கள். 


 



சென்ற இடத்தில் எஸ்.கே.ஆர் மற்றும் சாருபாலாவை வேண்டுமென வம்புக்கு இழுக்கிறார் குணசேகரன். சாருபாலாவை பார்த்து "நீங்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரி, தொழில் அதிபர். போயும் போயும் இந்த சேர்மேன் போஸ்டுக்கு போய் நிக்குறீங்களே?" என குணசேகரன் கேட்க, சாருபாலா அவருக்கு சரியான பதிலடி கொடுக்கிறார். "நான் என் சுய புத்தியுடன் சுய சிந்தனையுடன் செயல்படுகிறேன்" என்கிறார். 


 



"எஸ்.கே.ஆர் சங்கத்து தேர்தலில் நின்னா நானும் நிற்பேன். அவரோட பொண்டாடி நின்னா என்னோட பொண்டாட்டியை நிறுத்துவேன்" என குணசேகரன் திமிராகப் பேச, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. ஒரு வழியாக கேண்டிடேட் அறிவிப்பை கொடுத்து விடுகிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 


அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


ஜனனி சாருபாலாவை சந்தித்துப் பேசுகிறாள். "அப்பத்தா வழக்கில் நான் ஆஜராவது குணசேகரனுக்கு தெரியுமா?" என சாருபாலா ஜனனியை கேட்க "எப்போ தெரிய வருதோ அப்ப பாத்துக்கலாம்" என சொல்கிறாள். 


 



வீட்டுக்கு சென்றதும் ஜனனி, குணசேகரனிடம் "அப்பத்தாவின் வழக்கிற்கும் ஜீவானந்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குற்றவாளி வேறு ஒருத்தர் என நிரூபிக்கப்பட்டால் உங்க மகன் எங்களோட வழியில் தலையிடக்கூடாது" என விசாலாட்சியிடம் சபதம் வைக்கிறாள். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 


அந்த நேரத்தில் குணசேகரன் வீட்டுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வருகிறார். சக்தியும் ஜனனியும் அப்பத்தா வழக்கை மறுவிசாரணை  செய்ய சொல்லி வழக்கு தொடர்ந்துள்ளதால் அதன் காரணமாக இன்ஸ்பெக்டர் குணசேகரனை கைது செய்து அழைத்து செல்ல வந்து இருக்கிறார்.  "விஷயம் எஸ்.பி வரைக்கும் போயிடுச்சு"  என சொல்ல "அதெல்லாம் வர முடியாது" என கதிர் கெடுபிடி காட்டுகிறான்.


 



"வரவில்லை என்றால் போலீஸ் ஃபோர்ஸை அழைத்து வந்து அள்ளிட்டு போற மாதிரி இருக்கும்" என சொல்கிறார் இன்ஸ்பெக்டர். பெண்கள் அனைவருக்கும் மனசுக்குள் ஒரே சந்தோஷமாக இருக்கிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)எபிசோடுக்கான ஹிண்ட்.