கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான ’ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 


ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்:


இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தீபாவளி பரிசாக கடந்த நவம்பர் 10ம் தேதி வெளியானத் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே.சூர்யா , நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன், சத்யன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.


இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் எஸ். கதிரேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய, ஷபீக் முகமது அலி எடிட்டிங் துறையில் பட்டையை கிளப்பி இருப்பார். 






ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு: 






ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது. மேலும், சன் டிவி ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுள்ளது. இந்தநிலையில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' டிசம்பர் 8 முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாபெரும் வெற்றிபெற்ற ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்:


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில்  சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். காத்திருப்பிற்கு ஏற்ற வகையில் ஜிகர்தண்டா திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.  சமூக பிரச்சனை ஒன்றை கமர்ஷியல் வடிவத்திற்குள் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கும் ஜிகர்தண்டா திரைப்படம் இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. 


மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசை அனைவராலும் கொண்டாடப் பட்டு வருகிறது.  விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.


மேலும் சில தகவல்கள்...


வெளியான தேதி : நவம்பர் 10, 2023 (வெள்ளிக்கிழமை)
சென்சார்: யு/ஏ
படத்தின் முழு நேரம்: 2 மணி 52 நிமிடங்கள்
மொழிகள்: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி
சாட்டிலைட்: சன் டிவி
ஓடிடி: நெட்ஃப்ளிக்ஸ்