ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஏ.ஜி.எஸ். பாத்திரக்கடை ஓனர் தனது வீட்டுக்கு வந்த மொட்டை கடுதாசியை கொண்டு வந்து கொடுத்து விட்டு செல்ல சௌந்தரபாண்டி இதனை விசாரிக்க முடிவெடுத்தான்.


இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் முத்துபாண்டியிடம் மூணு பேப்பர், பேனாவையும் எடுத்துட்டு வந்து உங்க அம்மா, பரணி, சிவபாலனிடம் கொடு என்று சொல்ல அவனும் கொண்டு வந்து கொடுக்கிறான். தொடர்ந்து சௌந்தரபாண்டி மூணு பேரும் நான் சொல்றதை அப்படியே எழுதுங்க என்று சொல்லி அந்த மொட்டை கடுதாசியில் எழுதி இருப்பதை அப்படியே சொல்ல பாக்கியம் அதிர்ச்சி அடைகிறாள்.


இருந்தாலும் சௌந்தரபாண்டி சத்தம் போட்டு மூவரையும் எழுத வைத்து ஒவ்வொருவரிடம் இருந்து அந்த பேப்பரை வாங்கி பார்க்கும் போது பாக்கியம் கையெழுத்தும் மொட்டை கடுதாசியில் இருந்த கையெழுத்தும் ஒரே மாதிரி இருக்க அந்த கடிதத்தை எழுதியது பாக்கியம் தான் என்று கண்டு பிடிக்கிறான்.


இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி பாக்கியத்தை அறைந்து இனிமே இந்த வீட்டில் உனக்கு இடம் கிடையாது என்று சொல்லி திட்டி வெளியே போக சொல்ல அம்மாவை வெளியே போக சொன்னா நானும் வெளியே போய்டுவேன் என பரணி மிரட்ட சௌந்தரபாண்டி இருவரையும் வெளியே துரத்த வீட்டு வாசலின் நின்றபடி இருக்கின்றனர்.


கொஞ்ச நேரத்தில் மழை பெய்ய தொடங்க இருவரும் மன்னிப்பு கேட்க சௌந்தரபாண்டி ஏற்க மறுக்க மழையில் நனைந்தபடி இருக்கும் பாக்கியம் ஒரு கட்டத்தில் மயங்கி விழுகிறாள். இதனால் சிவபாலன், பரணி என இருவரும் பதறி போய் பாக்கியத்தை எழுப்ப முயற்சி செய்ய பாக்கியம் கண் திறக்காமல் இருக்கிறாள்.


இதனால் பரணி அம்மா கண்ணையே திறக்க மாட்றாங்க, அவங்கள உள்ள கூட்டிட்டு வர சொல்லுங்க அவங்களை மன்னிச்சிடுங்க என்று அப்பாவிடம் கெஞ்ச உன் அம்மாவை உள்ள அனுப்பனால் எனக்கு என்ன கிடைக்கும் என்று சௌந்தரபாண்டி கேட்க பரணி அம்மாவுக்காக நீங்க சொல்றவனையே நான் கல்யாணம் பண்ணிக்கறேன் என வாக்கு கொடுக்கிறாள்.


பின்னர் பாக்கியத்தை உள்ளே தூக்கி வந்து சிவபாலனும் பரணியும் கை கால்களை தேய்த்து விட கண் விழிக்கும் பாக்கியம் எனக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்காதே, உனக்கு பிடிச்சவனை போய் கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழு என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.’




மேலும் வாசிக்க..Mamannan: மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு... உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு என்ன தெரியுமா?


Seetha Raman: போட்டியில் ஜெயித்ததும் சீதாவுக்கு காத்திருந்த ஷாக்.. சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்