மாமன்னன் படத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உதயநிதி ,ரெட் ஜெயண்ட் மூவிஸ் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Continues below advertisement

ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு  உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. படப்பிடிப்பு 2018- ஆம் ஆண்டு தொடங்கி 80 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு உள்ள நிலையில், இந்த படத்தை நிறைவு செய்யாமல் உதயநிதி மாமன்னன் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல், அந்த படம் தனது கடைசிப்படம் என கூறியுள்ளார். 

ஏஞ்சல் படத்துக்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் அதனால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். ஒப்பந்தப்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார். எனவே எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி நிறைவு செய்து தர வேண்டும். மேலும் 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 

Continues below advertisement

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பதில் தர வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் படம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நிலையில் முக்கிய வேடத்தில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், லால், உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  கடந்த ஜூன் 1 ஆம் தேதி  மாமன்னன் படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.  இப்படம் கர்ணன், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கி உள்ளதால் ரசிகர்களுக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

மேலும் படிக்க 

Tirupati: திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற சிறுவன்.. தாக்கிய சிறுத்தை.. அதிர வைக்கும் ‘திக் திக்’ நிமிடங்கள்..!

TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? மழை நிலவரம் இதோ..