Trichy Airport: திருச்சியில் புதிய விமான முனையம் விரைவில் திறக்கப்பட உள்ளது - அதிகாரிகள் தகவல்

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய கட்டுமான பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதனை விரைவில் திறக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Continues below advertisement

திருச்சி விமான நிலையம் விரிவாக்கம் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூடுதலாக விமானங்கள் இயக்க கோரிக்கையும் முன்வைக்கபடுகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.951.28 கோடியில் புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணியை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். இந்த நிலையில் 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பின் காரணமாக கட்டுமான பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது கட்டுமான பணி விரைவாக நடைபெற்று வருகிறது. விரைவில் திறப்பு விழா காணுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மேலும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தின் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளில் தமிழர்களின் கலை பண்பாட்டை விவரிக்கும் வகையில் வண்ணமிகு ஓவியங்கள் வரையப்பட இருக்கிறது.

Continues below advertisement


இந்த விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய முனையம் திறந்தால் ஒரே நேரத்தில் 2,900 பயணிகளை கையாளும் வகையில் இந்த புதிய முனையம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 48 பரிசோதனை கவுண்ட்டர்களும், 10 ஏரோ பிரிட்ஜ்களும் அமைக்கப்பட உள்ளன. அத்துடன் புதிய முனையத்தில் கட்டுப்பாட்டு அறை, தொழில்நுட்ப அறை, ரேடார் கருவி மற்றும் இதர கருவிகள் அமைக்கும் பணி உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. மேலும் திருச்சி விமான நிலையத்தின் நுழைவுவாயில், விமான நிலையத்தின் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அதன் சிறப்பு குறித்த தகவல்களும் பதிவிடப்பட உள்ளன. இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்தின் டுவிட்டர் பக்கத்தில் புதிய முனையத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கான புகைப்படத்தையும் அதிகாரிகள் பகிர்ந்துள்ளனர். இதன்மூலம் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து விரைவில் விமான நிலைய முனையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement