ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்று மகாவின் சூழ்ச்சியால் சீதா கண்ணை திறக்க முடியாமல் சரிந்து விழுந்தாள்.


இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தாலும் சீதா ஆடி தான் ஆகணும் என சிவகுரு மாஸ்டர் சொல்ல ராம், மீரா, துரை, அப்பா ராஜசேகர் என எல்லாரும் சீதாவை கண் திறக்க சொல்ல சீதா திறக்க முடியாமல் மூடியபடியே இருக்கிறாள். மறுபக்கம் ஜெயா மாஸ்டர் அடுத்த ரவுண்டுக்கு லேட் ஆகுது, சீதா வரணும், இல்லனா வின்னர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று சொல்ல ப்ரியாவும் அஞ்சலியும் ஆட இரண்டாவது சுற்றுக்காக ஆட தொடங்கி விடுகின்றனர்.


இதனையடுத்து ராம் எல்லாரையும் வைத்து கொண்டு நெஞ்சு வலி வந்தது போல ட்ராமா போட எல்லாரும் பதறுவது போல நடிக்க சீதா கண்ணை திறக்காமல் என்னாச்சு என்னாச்சு என கேட்டு கொண்டே இருக்கிறாள். இறுதியில் ராமுக்கு நெஞ்சு வலி என சொன்னதும் கண்ணை திறந்து பார்த்து விடுகிறாள். பிறகு ராமும் சீதாவும் சேர்ந்து பரதமாட தொடங்க ரெண்டு பேரும் சூப்பரா ஆடி போட்டியில் வெற்றியும் பெறுகின்றனர்.


இதனால் மகா கோபமாக எழுந்து சென்று விட மதுமிதாவும் எழுந்து சென்று விடுகிறாள். அடுத்தபடியாக மது நான் இந்த வீட்டை விட்டு போகணும், அதுக்காக தானே இந்த போட்டி என்று சொல்லி வீட்டை விட்டு கிளம்ப தயாராக மகாவும் அர்ச்சனாவும் தடுக்க முயற்சி செய்கின்றனர். ஆனாலும் மதுமிதா கிளம்புவதில் உறுதியாக இருக்கிறாள்.


உங்க அப்பாவோட போக போறயா? சூர்யா வீட்டுக்கு போக போறயா? என மகா கேட்க நான் இங்கே எங்கயும் போக போறது இல்ல, வேற எங்கயாவது போக போறேன் என்று சொல்கிறாள். பிறகு அப்பா மதுவை தன்னுடன் வந்து விடுமாறு கூப்பிட நான் உங்க கூட வர மாட்டேன் என அதிர்ச்சி கொடுக்கிறாள்.


இது எதுவும் தெரியாமல் சீதா வந்து நீ போயிடு அக்கா, அது தான் உனக்கும் நல்லது என்று சொல்ல மதுமிதா கிளம்பி செல்ல மகா ராமை வைத்து மதுவை தடுக்க திட்டம் போடுகிறாள். மதுமிதா எங்கயோ போக போறதா சொல்றா, திரும்பவும் அவ தற்கொலை முயற்சி எதாவது செய்தா நமக்கு தான் பிரச்சனை, அவளை நீ தான் தடுத்து நிறுத்தனும்னு சொல்ல ராம் மதுவை தடுத்து நிறுத்துகிறான்.


சீதா அக்கா வீட்டை விட்டு போகணும் அது தானே போட்டி என்று சொல்ல ராம் மது இங்க தான் இருப்பாங்க என்று சொல்ல சீதா அதிர்ச்சி அடைகிறாள்.