விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் பாக்கிய லட்சுமி சீரியலும் ஒன்று. இந்த சீரியலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு நிலவுகிறது. ஒரு பெண் தனது வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் சந்திக்கும் சவால்களை கொண்டு இந்த சீரியலின் கதை பின்னப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியல் தொடர்பாக வெளியாகி இருக்கும் ஒரு புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த சீரியலில், பாக்கியலட்சுமியின் கணவர் கோபி, ராதிகா என்ற இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். குடும்பத்தை ஏமாற்றி கொண்டு அந்த பெண்ணுடன் பழகி வரும் கோபி, எப்போது சிக்குவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். கோபி என்ற கதாப்பாத்திரத்தை சுற்றி மீம்ஸ்களுக்கும், வீடியோக்களும் அவ்வப்போது வெளியாவது வழக்கம்.
அந்த வரிசையில், சமீபத்தில் வெளியான ஒரு ப்ரொமோவை வைத்து ரசிகர்கள் கோபியை டிரால் செய்து வருகின்றனர். அந்த ப்ரொமோவில், விரைவில் கோபிக்கும், ராதிக்காவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், தங்களது ஆர்வத்திற்கு பட்டைத்தீட்டிய நெட்டிசன்கள், கோபிக்கும் ராதிகாவுக்கும் திருமணம் நடந்தது போன்ற ஃபோட்டோ எடிட்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளனர். இது சீரியல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இன்னும் சிலரோ, இது உண்மையான ப்ரொமோதான் என நினைத்து, கோபி - ராதிகா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாக்கியலட்சுமிக்கு ஆதரவு தெரிவித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் சிக்கலில் மாட்டி கொள்ளும் கோபியை, சீரியல் இயக்குனர் தப்பிக்க வைத்து கொண்டே இருக்கிறார். கோபி எப்போது மாட்டுவார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எது எப்படியோ, அத்தனை முக்கிய செய்திகளுக்கும் மத்தியில் இந்த சீரியல் டிரெண்டு ஒரு பக்கம் ஓடி கொண்டேதான் இருக்கிறது!
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்