தமிழ் சினிமாவில் நடிகர் ராஜ்கபூரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 90 களில் வாந்த பல இளைஞர்களை தனது படங்கள் மூலமாக காட்டி இழுத்தவர். தற்போது பல படங்களில் வில்லனாகவும் , குணச்சித்திர கதாபாத்திரத்திலும் மிரட்டி வருகிறார் ராஜ் கபூர். சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் வெளியான நந்தினி சீரியலின் இயக்குநரும் இவர்தான். ராஜ் கபூர் ஒரு தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகர். ஆரம்ப காலத்தில் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையில் அதற்கான முயற்சிகளை எடுத்து வெற்றியும் கண்டுள்ளார். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் காவல்துறை அதிகாரியாக தேர்வான அவர் , காவல்துறையை நம் பின்னால் வர வைக்க வேண்டும் என்றால் அதற்கு அரசியல்வாதி ஆக வேண்டும் அல்லது சினிமாக்காரனாக வேண்டும் என நினைத்துதான் இயக்குநராக மாற சென்னையை முகாமிட்டுள்ளார்.
நியூ காலேஜில் சேர்ந்த அவர் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறையில் பயணம் செய்ய தொடங்கியிருக்கிறார். முதன் முதலாக இயக்குநர் ஸ்ரீதர் அவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர் . அதன் பிறகு நடிகர் வாசு - பாரதி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். 1991 ஆம் ஆண்டு வெளியான தாலாட்டு கேக்குதம்மா படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார் . அந்த படத்தில் பிரபு மற்றும் கனகா நடித்திருந்தனர். படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை . காரணம் அதே ஆண்டில்தான் சின்னத்தம்பி படமும் வெளியானது, ஒரு தாலியை வைத்துக்கொண்டு மொத்த கதையும் நகர்கிறது ... சின்னத்தம்பி படம் இப்படியான வெற்றியை பதிவு செய்ய போகிறது என அப்போது எதிர்பார்க்காவில்லை என தெரிவிக்கிறார் ராஜ் கபூர்.
ராஜ் கபூர் அடுத்தடுத்து நிறைய படங்களை இயக்கியிருந்தாலும் இந்த கால தலைமுறைக்கும் பிடித்த மாதிரியான படங்கள் ஏராளம் . அவற்றுள் அவள் வருவாளா , ஆனந்த பூங்காற்று , வள்ளல், சுதந்திரம் உள்ளிட படங்களும் அடங்கும். அந்த காலத்து டாப் நடிகர்களான பிரபு , கார்த்திக், முரளி உள்ளிட்டவர்களை வைத்து படம் எடுத்தாலும் ராஜ் கபூருக்கு எப்போதுமே விஜய்காந்தை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால் அது இறுதி வரையில் நடக்கவில்லை என வருந்தும் இயக்குநர் ராஜ் கபூர், அவருடன் நடித்த அனுபவங்கள் அதற்கான ஏக்கத்தை குறைத்தது என்கிறார். ராஜ்கபூருக்கு ஷாருக் கபூர் என்ற மகன் இருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு மெக்கா புனித யாத்திரைக்காக சவுதி அரேபியா சென்ற அவர் , கடுமையான சளி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி அந்த நாட்டிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.