சோஷியல் மீடியா முழுவதும் இன்னும்  தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவுதான் பேசு கதையாக உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் விவாகரத்து என்றாலே சமுதாயம் சற்று திரும்பி பார்க்கத்தான் செய்யும் அதிலும் ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் வீட்டு விவகாரம் என்றால் சொல்லவா வேண்டும். யாருமே எதிர்பாராத வகையில் இருந்த இந்த பிரிவை தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னதான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் நாகரீகமான முறையில் தங்களின் முடிவுக்கு  ஒத்துழைப்பு தாருங்கள் என கூறியிருந்தாலும் , நெட்டிசன்கள் விடுவதாக தெரியவில்லை. தற்போது சிலர் இது தற்காலிக பிரிவுதான் என கிசு கிசுக்க தொடங்கியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா குறித்து பேசிய பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.







அந்த வகையில் வி.ஐ.பி 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் பொழுது , தனுஷ் அளித்த பேட்டி ஒன்றில், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், என் ரசிகர்கள் இருக்க வரைக்கும் எனக்கு எந்த குறையும் இல்ல என்றுதான் தொடங்குகிறார். மேலும் உங்க மனைவி குறித்து சொல்லுங்க என கேட்டதும் , மிகவும் பெருமையாக “ அவங்க ரொம்ப பிஸி.. குழந்தைகள பார்த்துகுற பொறுப்பு அவங்களுக்கு இருக்கு. அவங்க தன்னோட நேரத்தை பசங்களுக்காக செலவிடுறாங்க. பசங்க வளர்ந்த பிறகு அவங்க ஒரு சில வருடங்கள்ல மீண்டும் தனது கலைப்பயணத்தை தொடருவாங்க” என தெரிவித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனக்கு நடிக்க விருப்பம் இருப்பதையும் தனுஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.