ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை என்றாலே புது பட ரிலீஸ் குறித்து ஆவல் அதிகரிக்கும். அந்த வகையில் இன்று ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் நான்கு புது படங்கள் வெளியாகி, சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. மூன்று தமிழ் படங்களும் ஒரு கன்னட திரைப்படமும் வெளியாகியுள்ள நிலையில், எந்த படம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்பதைக் காண்போம். லவ் டுடே, நித்தம் ஒரு வானம், காஃபி வித் காதல், பனாரஸ் ஆகிய நான்கு திரைப்படங்கள் இன்று வெளியாகியுள்ளது. 


லவ் டுடே




உருகி உருகி காதலிக்கும் நிகித்தாவிற்காக (இவனா) புது போன் ஒன்றை பரிசளிக்கிறார் உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்). இவர்கள் காதலிப்பது நிகித்தாவின் அப்பாவிற்கு (சத்யராஜ்) தெரியவர, அவர்களின் இருவரின் போனை ஒருவருக்கொருவர் மாற்றி கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை எடுத்து வைக்கிறார்.


இதற்கு பின் இருவரின் போன்களை ஒருவொருக்கொருவர் நோண்டி பார்க்க, அவர்களை பற்றிய அனைத்து விஷயங்களும் வெளியே வருகிறது. உண்மையை தெரிந்த காதலர்கள் இருவரும், கோபப்பட்டு சண்டை போடுகிறார்கள். இறுதியில் ஹீரோவும் ஹீரோயினும் ஒன்று சேர்வார்களா, இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ். 


லவ் டுடே படத்தின் முழு விமர்சனத்தை படிக்க கீழே உள்ள லீங்க்கை கிளிக் செய்யவும்:


படிக்க :- Love Today Review : ‘லவ் பண்ணலாமா வேணாமா’.. மொபைல் சண்டை ஜெயித்ததா தோற்றதா? - வந்தாச்சு ‘லவ் டுடே’ திரைவிமர்சனம்!


நித்தம் ஒரு வானம் 




எதிலும் 100% பெர்ஃபக்ட், சுத்தம் சுகாதாரம் என OCD பிரச்சனையுடன் வாழும் அர்ஜூனுக்கு (அசோக் செல்வன்) திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்துக்கு முதல் நாள் இரவு, முன்னாள் காதலன் பற்றி பேசும் மணப்பெண்ணிடம் பிராக்டிக்கல் ஆக சொல்வதாக கூறி பேசும் அவருடைய பேச்சுக்கள், திருமணம் நின்று போக காரணமாகிறது.


இதனால் கடும் மன அழுத்ததுக்கு ஆளாகும் அர்ஜூனிடம், டாக்டராக வரும் அபிராமி இரு காதல் கதைகள் அடங்கிய டைரிகளை கொடுத்து படிக்க சொல்கிறார். அந்த இரண்டிலும் கடைசி சில பக்கங்கள் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு கதையிலும் உள்ள கேரக்டர்களுக்கு கடைசியில் என்ன நேர்ந்தது? அசோக் செல்வன் தன் பிரச்னையில் இருந்து மீண்டாரா? என்ற கேள்விகளுக்கு நித்தம் ஒரு வானம் பதிலளிக்கிறது. 


நித்தம் ஒரு வானம் படத்தின் முழு விமர்சனத்தை படிக்க கீழே உள்ள லீங்க்கை கிளிக் செய்யவும்:


படிக்க :-Nitham Oru Vaanam Review: ‘வாழ்க்கையின் யதார்த்தம் இதுதான்’ ..அழகாக சொன்ன ‘நித்தம் ஒரு வானம்’ ..முழு விமர்சனம் இதோ!


காஃபி வித் காதல் 




ஜீவா, ஜெய், ஸ்ரீ காந்த் ஆகிய மூன்று பேரும் அண்ணன் தம்பிகள், டிடி தங்கை. கல்யாணம் முடிந்த ஸ்ரீகாந்துக்கு மனைவியின் மீது  மோகம் குறைந்து விட, அவர் மனம் வெளியில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம், நல்ல வேலையில் வசதியாக இருக்கும் ஜீவாவை, அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஐஸ்வர்யா ஏமாற்றி கழற்றி விடுகிறார்.


மற்றொரு பக்கம், சிறுவயதில் இருந்து, தன்னை உருகி உருகி காதலித்த நண்பியின் காதலை புரிந்து கொள்ளாமல், அவருக்கு கல்யாணம் ஆகப்போகிறது என்று தெரிந்தவுடன், அவரின் காதலை புரிந்து கொள்ளும் ஜெய், அவர் எப்படியாவது தனக்கு கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஒரு வேளை இந்த முயற்சி தோல்வியடையும் பட்சத்தில், ஊட்டியில் ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற தேவைப்படும் நில உரிமையாளரின் மகளை மணக்கவும் ப்ளான் செய்து வைத்திருக்கிறார். இதற்கிடையே, நில உரிமையாளரின் மகளுக்கும், சோகத்தில் இருக்கும் ஜீவாவுக்கு இடையே காதல் முளைக்க, என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார் ஜீவா.   


இதனிடையே  அவருக்கு அவசர அவசரமாக வீட்டில் திருமண ஏற்பாடு செய்ய, அந்த பெண்ணை ஜீவாவிற்கு கிடைக்கவிடாமல் சதி செய்கிறார் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த் சதி செய்ய காரணம் என்ன? ஜெய்யின் காதல் என்ன ஆனது?.. ஜீவாவுக்கு திருமணம் நடந்ததா இல்லையா? போன்ற கேள்விகளுக்கான பதில்கள்தான் காஃபி வித் காதல் படத்தின் மீதிக்கதை. 


காஃபி வித் காதல் படத்தின் முழு விமர்சனத்தை படிக்க கீழே உள்ள லீங்க்கை கிளிக் செய்யவும்:


படிக்க :-Coffee With Kadhal Review: சுந்தர்சியின் கிளாமர் காமெடி டெம்ப்ளேட்.. ஜீவாவிற்கு சக்சஸ் வந்து சேர்ந்ததா? - காஃபி வித் காதல் படம் எப்படி?


பனாரஸ் ட்விட்டர் விமர்சனம் : 


திலக்ராஜ் பலால் தயாரிப்பில் ஜெயதீர்த்தா இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் கன்னட திரைப்படம் பனாரஸ். இந்த திரைப்படத்தில் ஜைத் கான், சோனல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கன்னட திரைப்படம் தானே... என்ற போக்கை தொடர்ந்து மாற்றி வருகிறது கே ஜி எஃப், காந்தாரா போன்ற திரைப்படங்கள். இந்த வரிசையில் பனாரஸ் இடம் பெறுமா என்பதை பற்றி ட்விட்டர்வாசிகள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.










வெளியாகியுள்ள நான்கு திரைப்படங்களில் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி வாகை சூடுகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.