வடகிழக்கு பருவமழை: கரூர் மாவட்டத்தில் 101.30 மில்லி மீட்டர் மழை பதிவு

கரூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 101.30 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. சராசரியாக 08.44 மில்லி மீட்டராக மழை பெய்துள்ளது.

Continues below advertisement

கரூர் மாவட்டத்தில் மழையின் அளவு

Continues below advertisement

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் 101.30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் துவங்கி உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக கரூர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் மழைகள் பெய்யவில்லை. மேலும், கடந்த மூன்று நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் பஜார், வெங்கமேடு, கடம்பன்குறிச்சி, வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, சுக்காளியூர், தாந்தோன்றிமலை, ராயனூர், காந்திகிராமம், பசுபதிபாளையம், ஐந்து ரோடு, அரசு காலணி, பஞ்சமாதேவி, வாங்கல், நெரூர், ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் மழை பெய்துள்ளது. 

இன்று காலை நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் மழை அளவை தற்போது காணலாம்.

கரூரில் 02.04 மில்லி மீட்டராகவும், கே.பரமத்தியில் 01.04 மில்லி மீட்டராகவும், குளித்தலையில் 02.00 மில்லி மீட்டராகவும், தோகை மலையில் 04.00 மில்லி மீட்டராகவும், கே.ஆர்.புறத்தில் 01.00 மில்லி மீட்டர் ஆகவும், பிச்ச பட்டியில் 18.04 மில்லிமிட்டாகவும், கடவூர் பகுதியில் 22.00 மில்லி மீட்டராகவும்,  பாலவிடுதியில் 18.01 மில்லி மீட்டராகவும், மைலம்பட்டியில் 32.00 மில்லி மீட்டராகவும் மழையின் அளவு பதிவாகியுள்ளது. குறிப்பாக இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் மைலம்பட்டியில் 32.0 மில்லி மீட்டர் மலையின் அளவு குறிப்பிடத்தக்கது. மேலும், கரூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவுப்படி ஒட்டுமொத்தமாக 101.30 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. சராசரியாக 08.44 மில்லி மீட்டராக மழை பெய்துள்ளது.

 

கரூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்ததால் அப்பகுதி விவசாய பெருமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பல்வேறு இடங்களில் மேகமூட்டத்துடன் வானம் காட்சி அளித்தாலும், குறிப்பிட குறிப்பிட்ட அளவு மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola