சிவக்குமார், சூர்யா என்ற இரு பெரிய நடிகர்களின் குடும்பத்திலிருந்து வந்தாலும் கார்த்தியின் கதை தேர்வு தனியாக இருக்கும். பருத்திவீரன் என்ற ஒரு ரிஸ்க்கான சப்ஜெக்ட்டில் தனது அறிமுகத்தை ஒத்துக்கொள்ளவே தனி தைரியம் வேண்டும் . அமெரிக்கா சென்று இயக்கம் பற்றி படித்துவந்து மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தாலும் தென் தமிழ்நாட்டின் வாழ்வியலை அப்பட்டமாக தன் உடல்மொழியில் பருத்திவீரன் படத்துக்காக கொண்டு வந்திருப்பார் கார்த்தி.
பருத்திவீரனுக்கு பிறகு அடுத்த படமே கோலிவுட்டின் ஜீனியஸான செல்வராகவனுடன் ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி செய்தபோது அனைவரும் கார்த்தியை தன் கீர்த்தி குறையாமல் பார்த்தனர்.
அதன் பிறகு தான் ஒரு ஆர்ட் பிலிம் ஆர்ட்டிஸ்ட் இல்லை என்பதை உணர்த்துவதற்காக அவர் ஏகப்பட்ட கமர்ஷியல் படங்கள் செய்து தன் கிராஃபில் சில இறக்கங்களை சந்தித்தார். இடையில் பா. இரஞ்சித்தின் மெட்ராஸ், லோகேஷ் கனகராஜின் கைதி போன்ற படங்களில் நடித்து தான் கமர்ஷியல் எலிமெண்ட் இல்லை அப்பட்டமாக உணர்த்தினார்.
இருப்பினும், முத்தையா போன்ற ஆதிக்க சாதியவாதத்தை உறவுகள் என்ற பெயரில் விருந்து படைக்கும் இயக்குநர்களுடன் கை கோர்த்தார். அந்த விமர்சனங்கள் வந்தாலும் கார்த்தி தனது பாதையை நிறுத்திக்கொள்ளவில்லை. அந்தவகையில் தற்போத் முத்தையாவுடன் மீண்டும் கார்த்தி இணைந்திருக்கிறார். பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்திருக்கும் ஷங்கரின் மகள் அறிமுகமாக இருக்கும் இப்படமும் வழக்கம்போல் முத்தையா பாணியில் இருக்கும் என பலர் கூறுகின்றனர்.
மேலும் கார்த்தியின் அண்ணன் சூர்யா ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஜெய் பீம் என்ற படம் எடுத்த பிறகு கார்த்தி முத்தையாவின் படத்தில் நடிப்பது சரியல்ல. அதுமட்டுமின்றி அந்தப் படத்தை சூர்யாவின் 2d நிறுவனம் தயாரிப்பது அறம் அல்ல எனவும் குரல்கள் கோடம்பாக்கத்தில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கார்த்தி அடுத்ததாக பேச்சிலர் பட இயக்குநர் சதீஷூடன் கை கோர்க்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Bigg Boss Ultimate: 'தோற்றுப்போன வெறுப்போட திரும்ப வரான் நெருப்போட...'- பிக்பாஸ் அல்டிமேட்டில் கவிஞர் சினேகன்