காவாலா பாடலால் ரசிகர்களை கிரங்கடிக்க வைத்த தமன்னாவின் மாலத்தீவு ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 


தமிழ் திரையுலகில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா வியாபாரி, அயன், படிக்காதவன், பையா படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி தமன்னாவிற்கு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி மொழி படங்களில் நடித்து வரும் தமன்னா, அண்மையில் இந்தியில் வெளியான லஸ்ட் ஸ்டோரி2 மற்றும் ஜெயிலர் படத்தின் காவாலா பாடலால் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் டிரெண்டான நடிகையாக வலம் வந்தார். 


லஸ்ட் ஸ்டோரியில் தனது காதலர் விஜய் வர்மாவுடன் நெருக்கமாக நடித்ததால் தமன்னா எதிர்மறையான விமர்சனத்துக்கு ஆளானார். எனினும், காதலை உறுதிப்படுத்திய தமன்னா விஜய் வர்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து ஓய்வுக்காக மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்தீவில் காதலருடன் இருக்கும் தமன்னாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நீல நிற கடலில், வானவில் அழகில், பிங்க் உடையுடன் போஸ் கொடுக்கும் தமன்னாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை டிரெண்டாகி வருகின்றனர். 






இதற்கு முன்னதாக தமன்னாவும், விஜய் வர்மாவும் வெளிநாடு செல்லும்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோவும் வைரலானது. 






மேலும் படிக்க: Jawan Trailer: “விஜய் படங்களின் காப்பியா?” .. வெளியானது அட்லீயின் ஜவான் ட்ரெய்லர்.. இணையத்தில் கருத்து மோதல்..!


44 years of Niram Maradha Pookal : ஆயிரம் மலர்களே மலருங்கள்… பாரதிராஜாவின் எவர்க்ரீன் காதல் கதை.. 'நிறம் மாறாத பூக்கள்' வந்து 44 வருஷமாச்சு!