இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செப்டம்பர் மாதத்தில் அறிமுகமாக உள்ள புதிய பைக்குகள் எவை என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஆட்டோமொபைல் சந்தை:
சொகுசு பயணங்களுக்காக என்ன தான் எத்தனையோ விதமான கார்கள் அறிமுகமானாலும், இருசக்கர வாகனங்கள் என்பது இன்றளவும் பொதுமக்கள் வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. அதன் காரணமாக தான் தொடர்ந்து பல்வேறு இருசக்கர வாகனங்கள் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் Hero Karizma XMR , TVS X e-scooter , Honda SP160 , புதிய Ola S1 வரிசை மற்றும் Ducati Diavel V4 என பல்வேறு வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வரிசையில் செப்டம்பர் மாதமும் சில முக்கிய இருசக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார வாகனங்களும் அடங்கும்.
01. ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350:
ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மோட்டார் சைக்கிளானது இதுவரை இல்லாத அளவிலான மறுசீரமைப்புடன் செப்டம்பர் 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய வாகனமானது கிளாசிக் 350-ஐ போன்ற தோற்ற வடிவமைப்பையும், ஜே சீரிஸ் இன்ஜினையும் கொண்டுள்ளது. டியூல் சேனல் ஏபிஎஸ் தொழில்நுட்பம் கொண்ட முதல் புல்லட்டாக ராய்ல் என்ஃபீல்ட் புல்லட் 350 மாடல் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1.5 லட்சம் முதல் ரூ.1.7 வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
02. டிவிஎஸ் அபாச்சி ஆர்ஆர் 310:
டிவிஎஸ் நிறுவனம் தனது கூட்டாளியான பிஎம்டபள்யூ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள முதல் வாகனம் அபாச்சி ஆர்ஆர் 310. அதேநேரம், இது BMW நிறுவனத்தின் G 310 R மாடலை வெறும் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வாகனமாக மட்டுமே இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேக்ட் ஸ்ட்ரீட் பைட்டர் வெர்ஷன் பைக், வரும் செப்டம்பர் 6ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
03. 2024 கேடிஎம்390 டியூக்
சோதனை ஓட்டத்தின்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களை தொடர்ந்து, இறுதியாக 2024 கேடிஎம் 390 டியூக் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள புதிய 399சிசி இன்ஜின் 44.8எச்பி மற்றும் 39Nm டார்க் ஆற்றலை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. இந்த பைக்கின் விலை இந்திய சந்தையில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 475 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
04. சுசுகி வி- ஸ்டோர்ம் 800DE
Suzuki V-Strom 800DE ஆனது கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இது GSX-8S நேக்கட் பைக்குடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட புதிய 776cc பேரலல்-ட்வின் இன்ஜின் பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு புதிய வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. V-Strom 650 XT போலல்லாமல், புதிய 800DE ஆனது நவீன எலக்ட்ரானிக்ஸ் சூட்டை கொண்டுள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ.11 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Car loan Information:
Calculate Car Loan EMI