Women's Reservation Bill: புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு நடிகை தமன்னா வரவேற்பு தெரிவித்துள்ளார். 


1996ம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா அடுத்தடுத்து வந்த அரசுகளால் பல்வேறு காரணங்கள் கூறி நிறைவேற்றப்படாமல் இருந்தது. நீண்ட காலமாக பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும்படி பல்வேறு தேசிய பெண்கள் கூட்டமைப்பினர் வற்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டத்தில் தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 


மசோதா நிறைவேறிய நிலையில் மேலவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கும் மசோதா நிறைவேறியதும் சட்ட வடிவம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீடு மசோதாவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தாக்கலானது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நடிகைகள் தமன்னா, திவ்யா தட்டா மற்றும் ஷெஹ்னாஸ் கில் பங்கேற்றனர். 


நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை தமன்னா, “பெண்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள இட ஒதுக்கீடு மசோதா சாதாரண மக்களும் அரசியலுக்கு வரலாம் என்பதை ஊக்கப்படுத்துகிறது” என்றார். நடிகை திவ்யா தட்டா பேசும்போது, பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொண்டுவந்தது மிகப்பெரிய தொடக்கமாக உள்ளது என்றும், பெண்கள் எதிலும் முன்னுதாரணமாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். 






இட ஒதுக்கீடு மசோதாவை நேற்று மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மோக்வால் தாக்கல் செய்தார். நாரி சக்தி வந்தன் என பெயரிடப்பட்டுள்ள பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மறுவரையறை செய்த பின்னரே அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பதால் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா வரும் 2029ம் ஆண்டு தான் அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க: Amy Jackson: எமி ஜாக்சன்தானா இது? ஓப்பன்ஹெய்மர் நடிகர்போல் அச்சு அசலாக மாறிய நடிகை.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!


Allu Arjun : மகேஷ்பாபு பிரபாஸைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன்...லண்டனில் வரப்போகும் மெழுகு சிலை