ஓப்பன்ஹெய்மர் புகழ் பிரபல ஹாலிவுட் நடிகர் கிலியன் மர்ஃபி போல் நடிகை ஏமி ஜாக்சன் தன் தோற்றத்தை மாற்றி உள்ளது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.


மதராசப்பட்டினம் துரையம்மா


கோலிவுட் சினிமாவில் மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை ஏமி ஜாக்சன். ‘துரையம்மா’ எனும் கதாபாத்திரத்தில் ஆங்கிலேய பெண்மணியாக தனது க்யூட்டான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஏமி ஜாக்சன், தொடர்ந்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என ஒரு ரவுண்டு வந்தார்.


தமிழில் மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமாகி ரஜினிகாந்துடன் 2.0, விஜய்யுடன் தெறி, தனுஷூடன் தங்க மகன், விக்ரமுடன் ஐ, உதயநிதி ஸ்டாலின் உடன் கெத்து என உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து டாப் ஹீரோயினாக ஏமி ஜாக்சன் வலம் வந்தார்.


மேலும் இந்தி விண்ணைத்தாண்டி வருவாயா படமான ‘ஏக் தீவானா தா’ படத்தில் நடிகர் பிரதீக் உடன் நடிக்கும்போது இருவரும் காதலில் விழுந்து பாலிவுட்டின் விருப்ப ஜோடியாக வலம் வந்தனர். ஆனால் இருவரும் சில காலத்திலேயே தங்கள் உறவை முறித்துக் கொண்டனர்.


தொடர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த ஏமி ஜாக்சன், 2019ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரைக் காதலித்து நிச்சயம் செய்து கொண்ட நிலையில், இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது.


ஆச்சர்யப்படுத்தும் புது லுக்!


ஆனால் அதன் பின் ஜார்ஜூடன் ஏமியின் உறவு முறிந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக எட் வெஸ்ட்விக் எனும் நடிகரை தற்போது காதலித்து வருகிறார். இவருடன் தொடர்ந்து காதல் ததும்பும் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் நிலையில், ஏமியை ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.


மேலும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் பகிர்ந்து ஆக்டிவ்வாக வலம் வரும் ஏமி, தற்போது பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஓப்பன்ஹெய்மர் நடிகர் போன்ற தோற்றம்


தன் காதலர் எட் வெஸ்ட்விக் உடன் தான் சமீபத்தில் எடுத்துக்கொண்ட ஃபோட்டோஷூட் புகைப்படங்களை ஏமி  பகிர்ந்துள்ள நிலையில், அதில் அவர் பிரபல ஹாலிவுட் நடிகரும் ஓப்பன்ஹெய்மராக சமீபத்தில் நடித்து கவனமீர்த்தவருமான கிலியன் மர்ஃபி போல் தோற்றமளிக்கிறார்.


 






குறிப்பாக, பிரபல ஆங்கில சீரிஸான ‘பீக்கி பிளைண்டர்ஸ்’ (Peaky Blinders) தொடரில் நடிகர் கிலியன் மர்ஃபி தோன்றிய தாமஸ் ஷெல்பி கதாபாத்திரம் போலவே ஏமி தோற்றமளிக்கும் நிலையில், ஏமி ஜாக்சன் இந்த டான்ஸ்ஃபர்மேஷனைக் கண்டு ரசிகர்கள் வியப்பில் கமெண்ட் செய்து வருகின்றனர்.


மேலும் ஏமியின் காதலர் எட் உள்பட பலரும் ஃபயர் பறக்கவிட்டு ஏமியின் இந்தப் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.