நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடிக்கத் தொடங்கி, தற்போது பாலிவுட்டுக்குச் சென்று வெற்றிகரமான நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை டாப்ஸி பண்ணு.


தன் நடிப்பால் ஒருபுறம் டாப்ஸி கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வந்தாலும், தன் அதிரடி கருத்துகள், நடவடிக்கைகளால் மற்றொரு புறம் அதிரடி காண்பித்து லைம்லைட்டிலேயே இருந்து வருகிறார் டாப்ஸி.


ஜூனியர் ஜெயா பச்சன்


குறிப்பாக பாலிவுட் பாப்பராசி புகைப்படக் கலைஞர்களுடன் சமீபகாலமாக அடிக்கடி டாப்ஸிக்கு வாக்குவாதம் ஏற்பட்டு வரும் நிலையில், ‘ஜூனியர் ஜெயா பச்சன்’ என்று பல பாலிவுட் மீடியாக்களும் டாப்ஸியை அழைக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் டாப்ஸி தன் அதிரடி ஸ்டேட்மெண்ட்டால்  தற்போது மீண்டும் பாலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளார்.




தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஆஸ்க் மீ எனிதிங்' எனும் பெயரில் தன் ரசிகர்களுடன் உரையாடிய டாப்ஸி பண்ணு, தன் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய ரசிகர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.


அதன்படி,  டாப்ஸியிடம் ரசிகர் ஒருவர் “உங்கள் திருமணத்துக்காக என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?” எனக் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு,  “நான் இன்னும் கர்ப்பமாகவில்லை, விரைவில் கர்ப்பமாகும் திட்டமும் இல்லை... அப்படி நடந்தால் சீக்கிரம் உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன்” என பதிலளித்துள்ளார். 


இவர் தான் காதலரா?


தனது தனிப்பட்ட வாழ்க்கை, மற்றும் டேட்டிங் வாழ்க்கை பற்றி ரகசியம் காத்து வரும் டாப்ஸி, பேட்மிண்டன் வீரரான மதியாஸ் போ (Mathias Boe) என்பவரைக் காதலித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. 


முன்னதாக இதேபோல் திருமணம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த டாப்ஸி, தனக்கு சில நாள்கள் நடைபெறும் நீண்ட கல்யாண வைபோக விழாக்களில் விருப்பம் இல்லை என்றும், இவை தனக்கு சோர்வைத் தருவதாகவும் கூறியிருந்தார். 


மேலும் சமூக ஊடங்களில் இருந்து பொதுவாக விலகி இருக்கும் டாப்ஸி அது குறித்துப் பேசுகையில்,  “நான் சமூக ஊடகங்களில் இணைந்தபோது, ​​மக்களுடன் தொடர்புகொள்வது, அவர்களுடன் பேசுவது, ஒரு நேர்மறையான தகவல்தொடர்பு உருவாகும் சூழல் ஆகியவற்றை உணர்ந்தேன். ஆனால் மெல்ல மெல்ல சமூக ஊடகங்கள் நச்சுத்தன்மையை பரப்புபவையாக மாறிவிட்டன. அதனால், நான் இந்த சூழலை அனுபவிக்கவில்லை” என பதிலளித்திருந்தார்.


டாப்ஸி தற்போது ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷாவாக வலம் வரும் நடிகர் ஷாருக்கான் உடன் டங்கி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Rajinikanth: 'யாருமே பார்க்காத ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்’ .. யார் யாரு இருக்கான்னு பார்த்தீங்களா?


Maaveeran Box Office Collection: சொல்லி அடித்த சிவகார்த்திகேயன்.. 4 நாட்களில் மாவீரன் படத்துக்கு கிடைத்த வசூல் இவ்வளவா?