தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவின் வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், பாலிவுட்டில் விரைவில் கால் பதிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


தென்னிந்திய சினிமாவின் குயின்


மலையாளம் தொடங்கி தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வளர்ந்து கோலோச்சி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பிரபல தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார் - 80களின் பிரபல நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ், குழந்தை நட்சத்திரமாகவே தன் திரைப் பயணத்தை மலையாளத்தில் தொடங்கினார்.


தொடர்ந்து மலையாளம் சினிமாவான ‘கீதாஞ்சலி’ படத்தில் நடிகர் மோகன் லால் உடன் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2015ஆம் ஆண்டு தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக அறிமுகமானார்.


தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த ‘ரஜினிமுருகன்’ திரைப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் தமிழ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்து லைக்ஸ் அள்ளினார்.


தேசிய விருது வென்ற நடிகை




தொடர்ந்து தமிழ், மலையாளம் தாண்டி தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த நிலையில், நடிகை சாவித்ரியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் (மகாநடி) படத்தின் மூலம் பெரும் பாராட்டுகளைக் குவித்து கவனமீர்த்தார். மேலும், இப்படத்துக்காக தேசிய விருதையும் வென்றார் கீர்த்தி.


அதன் பின் டோலிவுட், கோலிவுட் என தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், இறுதியாக தமிழில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.


அட்லீ இயக்கத்தில் பாலிவுட் என்ட்ரி?


இந்நிலையில் தென்னிந்தியாவில் கோலோச்சி வரும் கையுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிலும் கால் பதிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


நடிகர் வருண் தவான் ஜோடியாக காதல், ஆக்‌ஷன், கிளாமர், எமோஷன் என அனைத்தும் கலந்த பக்காவான பாலிவுட் படத்தில் கீர்த்தி அறிமுகமாகிறார் என்றும், அட்லீ இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், பாலிவுட்டுக்கு வந்தால் வழக்கமான பாலிவுட் நடிகையாக கீர்த்தி சுரேஷை மாற்றி விடுவர் என்றும், மற்றொருபுறம் பாலிவுட்டுக்கு தயவு செய்து கீர்த்தியை கூட்டி வாருங்கள் என்றும் பாலிவுட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Rajinikanth: 'யாருமே பார்க்காத ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்’ .. யார் யாரு இருக்கான்னு பார்த்தீங்களா?


Maaveeran Box Office Collection: சொல்லி அடித்த சிவகார்த்திகேயன்.. 4 நாட்களில் மாவீரன் படத்துக்கு கிடைத்த வசூல் இவ்வளவா?