Maaveeran Box Office Collection: சொல்லி அடித்த சிவகார்த்திகேயன்.. 4 நாட்களில் மாவீரன் படத்துக்கு கிடைத்த வசூல் இவ்வளவா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் மீண்டும் அவரை வசூல் நாயகனாக முன்னிறுத்தியுள்ளது. 

Continues below advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் மீண்டும் அவரை வசூல் நாயகனாக முன்னிறுத்தியுள்ளது. 

Continues below advertisement

 சிவகார்த்திகேயன் நடித்த‘பிரின்ஸ்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் மீண்டும் அவரை வைத்து மாவீரன் என்னும் படத்தை தயாரித்துள்ளது. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், சுனில் குமார், பாலாஜி சக்திவேல், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்த இந்த படம் கடந்த ஜூலை 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

மாவீரன் படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், படம் கலவையான விமர்சனத்தை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. 

மாவீரன் படத்தின் முதல் பாதி காமெடியாகவும் இரண்டாம் பாதி கமர்சியல் ஆகவும் அமைந்துள்ள நிலையில் யோகிபாபுவின் காமெடி மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகியுள்ளது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார் சிவகார்த்திகேயன். அதனாலேயே மாவீரன் படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். 

முன்னதாக மாவீரன் படத்தின் டீசர் ட்ரெய்லர் பாடல்கள் என அனைத்தும் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த படம் சிவகார்த்திகேயன் கேரியரில் மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்துள்ளது.

மாவீரன் படத்தின் வசூல் நிலவரம்

இந்த நிலையில் வார இறுதி நாட்களைக் கடந்து வார நாட்கள் தொடங்கிய நிலையில் மாவீரன் படம் நான்கு நாட்களில் ரூபாய் 50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படமான மிஷன் இம்பாசிபிள் 7 படத்திற்கு போட்டியாக மாவீரன் களமிறங்கிய நிலையில் மாவீரன் வசூலில் மாவீரன் நல்ல நிலையை எட்டியுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

காமிக்ஸ் வரைபட கலைஞராக மாவீரன் படத்தில் வரும் சிவகார்த்திகேயன் தனக்கு கிடைத்த சூப்பர் பவரை கொண்டு எப்படி அரசியல்வாதி மிஸ்கினை எதிர்த்து பிரச்சினைகளிலிருந்து மக்களை காக்கிறார் என்பதே இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: போர்க்களமாக மாறிய குணசேகரன் வீடு.. தாண்டவமாடிய தாரா.. எதிர்நீச்சலில் நேற்று

Continues below advertisement
Sponsored Links by Taboola