Taapsee Marriage: நடிகை டாப்ஸி பன்னு தனது நீண்டகால காதலரான மத்தியாஸ் போவை  சமீபத்தில் உதய்பூரில் திருமணம் செய்து கொண்டார். 


நடிகை டாப்ஸி:


வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான 'ஆடுகளம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் பெற்றார் டாப்ஸி. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை என பல பிரிவுகளின் கீழ் 2011ம் ஆண்டுக்கான ஆறு தேசிய விருதுகளை கைப்பற்றியது. இப்படத்தின் ஒரு அங்கமாக இருந்த டாப்ஸிக்கு கோலிவுட் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.


ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக கதைக்கு மிகவும் பொருத்தமாக நடித்திருந்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2 , வந்தான் வென்றான், கேம் ஓவர் என ஏராளமான படங்களில் நடித்து வந்தார்.  தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.


தொடர்ச்சியாக கமர்சியல் படங்களில் நடித்து வந்த டாப்ஸி ஒரு கட்டத்திற்கு மேல் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். பிங், கேம் ஓவர்,ஹஸீனா தில்ருபா, மன்மர்ஸியான் உள்ளிட்டப் படங்களின் மூலம் தனக்கென ஒரு சினிமா பாணியை உருவாக்கி வருகிறார். சமீபத்தில் ஷாருக் கான் நடித்து இந்தியில் வெளியான டங்கி படத்தில் டாப்ஸி நடித்திருந்தார்.


10 ஆண்டுகால காதல்:


 இதற்கிடையில், கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பேட்மிண்டன் பிரிமியர் லீக் ஆட்டத்தில் பொது பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை சந்தித்திருக்கிறார். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், பிறகு காதலிக்க தொடங்கினர். தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி குறைவாகவே பேச விருப்பப்படுபவராகவே டாப்ஸி இருந்து வருகிறார்.


எனவே, சமீபத்தில் தான் தனது காதலை சமூக ஊடகங்களுக்கு தெரிவித்து, விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி  இருவருக்கும் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், 23ஆம் தேதி டாப்ஸி-மத்தியாஸ் போவுக்கு உதய்பூரில் திருமணம்  நடைபெற்றது. 


இந்த திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் சைலண்டாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் கோலிவுட், பாலிவுட் பிரபலங்கள் யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல, இவர்களின் திருமணம் புகைப்படங்கள் ஒன்றுகூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  




மேலும் படிக்க


ரசிகர்கள் மீட்டிங் வெச்சா நீங்க விஜய் ஆகிட முடியுமா.. சிவகார்த்திகேயனை கேள்வி கேட்ட பிரபலம்..


Tamanna Vijay Varma: தமன்னாவுடன் முதல் டேட்டிங் சென்றது எப்போது? மனம் திறந்த நடிகர் விஜய் வர்மா!