வரும் ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வரும் 23ஆம் தேதி வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டது. நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக, திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.


நடிகர் சூர்யாவுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், திரை உலகை தாண்டி அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக ஏழை, ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார். இதானால் சூர்யாவுக்கு திரையுலகை தாண்டிய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


முன்னதாத கடந்த ஆண்டு நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் 30க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் மற்றும் உடல்தானம் செய்தனர். மதுரை இராசாசி மருத்துவமனையில் ரசிகர்கள் உடல் தானம் செய்தனர். தொடர்ந்து அரசு மருத்துவமனை பணியாளர்கள் உடல்தானம் செய்ததற்கான சான்றிதழ்களை வழங்கினர். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் உடல் மற்றும் ரத்த தானம் செய்தது ஏராளமானோரின் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:


Manipur CM Resign: பழங்குடிப் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்..பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவாரா மணிப்பூர் முதல்வர்?


CM Stalin EXCLUSIVE Interview: செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் ஏன்? சர்ச்சையை தவிர்க்கலாமே! உதய் எப்படி ? - ஓபனாக பேசிய ஸ்டாலினின் மெகா எக்ஸ்குளுசிவ்!