சூர்யா 42 டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிக்க, சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடுயோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், பிரமாண்டமான முறையில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42.


வெளியான அப்டேட்


பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் டைட்டில் மற்றும் டீசர் அறிவிப்பு இந்த மாதம் வெளியாகும் என ஏற்கெனவே தயாரிப்பாளர் கே.ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் வரும் 16ஆம் தேதி சூர்யா 42 படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி வரும் ஏப்ரல் 16ஆம் தேதி அறிவிக்கப்படும் என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.


 






10 மொழிகளில் பிரமாண்டமான முறையில் இந்தப் படம் 3டியில் தயாராகி வருகிறது. யூவி க்ரியேஷன்ஸ் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா - சிறுத்தை சிவா முதன்முறையாக இணையும் படம் சூர்யா - 42. பிரம்மாண்டமான முறையில் தயாராகி வரும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 


13 கதாபாத்திரங்களில் சூர்யா


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெறும் கதையாக இந்தப் படம் உருவாகும் நிலையில், அரத்தர், மண்டாங்கர், வெண்காட்டார், முக்காட்டார், பெருமனத்தார் என  13 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முன்னதாக கோவா, எண்ணூர் துறைமுகம், கேரளா உள்பட பல இடங்களில் நடைபெற்றன. மேலும் சூர்யா 42 படப்பிடிப்பை ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


கொண்டாட்டத்தில் ரசிகர்கள்


மேலும் படத்தின் டீசர் வரும் மே மாதம் வரும் என்றும் தயாரிப்பாளர் கே.ஞானவேல் ராஜா முன்னதாகத் தெரிவித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் அனைத்து மொழி டீசர்களும் மே மாதம் வெளியாகும் என்றும், படம் குறித்த ஐடியாவை மக்களுக்குக் தரும் என்றும் முன்னதாக கே. ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.


சூர்யா ரசிகர்களை இந்த அறிவிப்பு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், சூர்யா 42 ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க: Salman Khan: ஃபோனில் உங்கள் குழந்தை இதை பார்ப்பதை விரும்புகிறீர்களா...? ஓடிடி தளங்களில் மேலோங்கும் ஆபாசம்.. சல்மான் கான் காட்டம்!