விழுப்புரம்: மிஸ் கூவாகம் இறுதிப் போட்டி விழுப்புரத்தில் மே 1 ஆம் தேதி நடைபெறுவதாகவும் கூவாகம் திருவிழாவின் போது விடுதிகளில் அதிகளவு கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்து விடுதிகளில் வசூலிக்கப்படுவதாக தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளனர். 


தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில்  செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய திருநங்கைகள்  கூட்டமைப்பு இணை செயலாளர் அருணா, இந்த வருடம் கூவாகம் திருவிழாவின் 50 சதவிகித போட்டிகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் நடைபெறுகிற நிலையில் மிஸ்கூவாகம் இறுதி போட்டி  விழுப்புரம் தளபதி திடலில் மே 1 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


கூவாகம் திருவிழாவிற்காக ஒவ்வொரு ஆண்டும் விழுப்புரத்திற்கு வருகை புரியும் திருநங்கைகளிடம் மூன்று மடங்கு கட்டணம் உயர்த்தி வசூலிப்பதாகவும் எத்தனை முறை புகார் அளித்தாலும் விடுதியின் மீது மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ரூ.2 ஆயிரம் வசூலிக்கும் விடுதிகள் தங்களிடம் 8 ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் இந்த வருடம் கூவாகத்தில் பகுதியில் டெண்ட் அமைத்து தங்க விருப்பதாகவும் 40 வயது பூர்த்தியடைந்த திருநங்கைகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர். மேலும் திருநங்கைகளின் வாழ்வாதாரம் வளர்ச்சி பெற ரயில்வே, அரசு மருத்துவமனைகளில் கேண்டீன்களில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண