Varalaru Mukkiyam: அடுத்தடுத்த தோல்வி..அப்பாவுடன் கைகோர்த்த ஜீவா.. வெளியானது ‘வரலாறு முக்கியம்’ ரிலீஸ் டேட்!

Varalaru Mukkiyam: நடிகர் ஜீவாவின் அடுத்த படமான வரலாறு முக்கியம் படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

சூப்பர் குட் ஃபில்ம்ஸ்:

Continues below advertisement

ஜீவாவின் அப்பா, ஆர் பி செளத்ரி நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனம்தான் சூப்பர் குட் ஃபில்ம்ஸ்.1980-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ஆரம்பத்தில் அடி வாங்கினாலும் அதன் பிறகு நல்ல படங்களை தயாரித்து வழங்க ஆரம்பித்தது. மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களை இந்நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. இவர்களுடைய முத்திரை படைக்கும் படைப்புகளுள், துள்ளாத மனமும் துள்ளும், நீ வருவாய் என, வின்னுக்கும் மன்னுக்கும், ஆனந்தம் என பல படங்களை கொடுத்துள்ளனர். 1990-2000 காலகட்டத்தில் வெளியான பல தமிழ் படங்களை சூப்பர் குட் ஃபிலிம்ஸ்தான் தயாரித்து வழங்கியது. 

ஜீவாவின் வரலாறு முக்கியம் படம்:

நடிகர் ஜீவாவின் வெற்றி படங்களாக கருதப்படும் கச்சேரி ஆரம்பம், ரெளத்திரம் உள்ளிட்ட படங்களை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்து வழங்கியது. இந்நிலையில், பல வருடங்களுக்கு பிறகு, ஜீவாவின் வரலாறு முக்கியம் படத்தை தயாரித்து வழங்கவுள்ளது. இப்படம் குறித்த தகவல் ஒன்றை, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

டிசம்பரில் ரிலீஸ்

 

முன்னதாக, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், “நாளை 5 மனிக்கு புதிய அறிவிப்பு  வெளியாகிறது. தயாராக இருங்கள்” என ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது.

 

அதன்படி, ஜீவாவின்ன் வரலாறு முக்கியம் என்ற படத்தை தயாரித்து வழங்கவுள்ளது. மேலும், இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல நல்ல படைப்புகளை மக்களுக்கு வழங்கும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ், இந்த படத்தையும் தயாரித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola