உயிர் தமிழுக்கு


மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள “உயிர் தமிழுக்கு” (Uyir Thamizhukku) படத்தில் இயக்குநர் அமீர் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு என பலரும் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசையமைத்த உயிர் தமிழுக்கு படம் கடந்த மே 10 தியேட்டர்களில் வெளியாகியது.


அரசியல் பகடியாக உருவாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சமகால அரசியல் சூழலையும் சமகால அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களை மறைமுகமாக பகடி செய்யும் வகையில் இந்தப் படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படியான நிலையில் அமீரின் உயிர் தமிழுக்கு படத்தை எதிர்த்து பத்திரிகையாளர் சந்திப்பு  நடத்தியுள்ளார் இயக்குனர் வராகி. 


எம்.ஜி.ஆரை கொச்சைப்படுத்துறாங்க


அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படம் எம்.ஜி.ஆரை கொச்சைப் படுத்தும் விதமாக இருப்பதாக இயக்குநர் வராகி தெரிவித்துள்ளார் ‘ ஜிகர்தண்டா , விடுதலை , வடசென்னை  இந்த மாதிரியான படங்களில் தொடர்ந்து எம்.ஜி.ஆரை கொச்சைப்படுத்தும் கருத்துக்களை பேசுவதாக வராகி தெரிவித்துள்ளார். அந்த வகையில் அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு படமும் எம்.ஜி ஆரை கொச்சைப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார் . இன்று ஸ்டானினையோ , உதயநிதி ஸ்டாலினையோ , அல்லது மறைந்த கலைஞர் கருணாநிதியை விமர்சித்து படம் எடுக்க முடியுமா?


கலைஞர் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை வைத்து ஆயிரம் சீன் சொல்வேன். ஆனால் படம் தியேட்டரில் வந்தால் அடித்து உடைக்கமாட்டார்களா? எம்.ஜி ஆரை கடவுளாக இன்றும் தமிழ் நாட்டு மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அமீர் ஒரு நல்ல கலைஞர். ஆனால் இந்த ஜாஃபர் சாதிக் விவகாரத்தில் அமீரின் வன்மமான ஒரு பக்கம் வெளியே தெரிகிறது.


அமீரை இயக்கும் தி.மு.க.:


அமீரை திமுக பின்னிருந்து இயக்குதோ என்று என்னால் சொல்ல முடியும் .அதற்கு ஏற்றபடி படத்தில் ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள். நான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரசிகன் . ஒரு ரசிகனாக நான் சொல்கிறேன் இப்படி தொடர்ந்து எம்.ஜி.ஆரை அசிங்கப்படுத்தும் செயல் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடித்த அண்ணாச்சி திமுக சார்புள்ளவர்.


இந்த தேர்தலில் தான் திமுகவுக்கு தான் வாக்களித்தேன் என்று அமீர் வெளிப்படையாகவே சொன்னார். படத்தை இயக்கிய ஆதம்பாவா பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறார். ஆனால் இப்படியான நிலையில் அவரை பின்னிருந்து திமுக இயக்குகிறது என்று நான் நினைக்கிறேன். ஆதம்பாவாவிடம் நான் இது ரொம்ப தவறான விஷயம் என்று ஃபோன் பண்ணி சொன்னேன். இப்படி தொடர்ச்சியாக தமிழ் திரையுலகம் திமுகவுக்கு ஆதராவாக செயல் பட்டு வருகிறதா? இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகரான அமீர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிர் தமிழுக்கு படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்கிற கேள்வியை எழுப்பியுள்ளார்.


இயக்குனர் வராகி சிவா மனசுல புஷ்பா என்ற படத்தைத் தயாரித்து, இயக்கி நடித்துள்ளார்.