ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் கவின் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.


கவின்


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமான கவின், தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக உருவாகியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான டாடா படம் அவருக்கு பெரிய வரவேற்பைக் கொடுத்த நிலையில், தற்போது அடுத்தடுத்த  பட வாய்ப்புகள் அவருக்கு அமைந்து வருகின்றன.


ஸ்டார்


‘பியார் பிரேம காதல்' படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார் படத்தில் தற்போது கவின்  நடித்து வருகிறார். அதிதி எஸ்.போஹன்கர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பாக ‘சிவாஜி கணேசனும் சுருளி நாச்சியாரும்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர்  ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், பி.வி.எஸ்.என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது.


கவின்  நடித்து வரும் படங்கள்


ஸ்டார் படத்தைத் தொடர்ந்து, கவின் நெல்சன் திலிப்குமார் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குநர் சிவபாலன் இந்தப் படத்தை இயக்குகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும், பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது.


வெற்றிமாறன் படத்தில் கவின்






இப்படத்தைத் தொடர்ந்து கவின் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விக்ரமன் அசோகன் இயக்கும் இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ப்ரோடக்‌ஷன் தயாரிக்க இருக்கிறது.


இப்படத்தில் நயன்தாரா கவினுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்றும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா தொடர்ச்சியாக கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் தயாரிக்கும் இப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப் படும் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரம் கவினை விட வயதில் 7 ஆண்டு மூத்தவரான நயன்தாரா இந்தப் படத்தில் எப்படி கெமிஸ்ட்ரியை ஒர்க் அவுட் செய்யப் போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.




மேலும் படிக்க : Star Shooting Wrapped: கவின் நடித்துள்ள 'ஸ்டார்' பட ஷூட்டிங் நிறைவு! மேக்கிங் வீடியோ பகிர்ந்த படக்குழு!


40 years of Vijay: குழந்தை நட்சத்திரம் முதல் தளபதி வரை! 40 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்!