சின்னத்திரை நடிகரான கவின், வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்து பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு அவர் மிகப்பெரிய செலிபிரிட்டியாக மாறினார். லிஃப்ட், டாடா என இரண்டு வெற்றி படங்களுக்கு படங்களுக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளியான 'பியார் பிரேமா காதல்' படத்தின் இயக்குநர் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' படத்தில் முன்னதாக இணைந்தார்.


 



கிளிம்ப்ஸ் வீடியோ :



ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் லால், அதிதி போஹாங்கர், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து ஸ்டார் படக்குழு புதிய அப்டேட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. 



வரவேற்பை பெற்ற மேக்கிங் வீடியோ : 


கவின் நடிக்கும் 'ஸ்டார்' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து விட்டது என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஸ்டார் படத்தின் முழுமையான மேக்கிங் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் இயக்குனர் இளன் பாடல் வரிகளை எழுத அந்த மேக்கிங் வீடியோ பின்னணியில் ஒலித்த பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா குரல் கொடுக்க அந்த பாடல் பெரிய அளவில் ரீச் கிடைத்துள்ளது. கவினின் ஸ்டைலிஷ் லுக் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது.




 


கவினின் போஸ்ட்  :


இந்த ஸ்டார் படத்தின் மேக்கிங் வீடியோவை தனது சோசியல் மீடியாவில் "ஒரு நாள் வாழ்வேன்" என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார் நடிகர் கவின். அவரின் இந்த நம்பிக்கை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்ஸ்களை குவித்துள்ளது. 


 



விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


 


அடுத்தடுத்து மூன்று படங்கள்  :


ஸ்டார் படத்தை தொடர்ந்து நடிகர் கவின் வேறு பல படங்களிலும் கமிட்டாகியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் மட்டும் வெற்றிமாறனின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் என அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார். கவின் நாடியில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன என்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.