குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான ஸ்ரீதேவி, ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலம் ஹீரோயினாக உருவெடுததவர் ஸ்ரீதேவி. தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவிக்கு ரசிகர்கள் ஏராளம். ரஜினி, கமல் உள்ளிட்ட பிரதான நடிகர்களுடன் நடிக்கும் ஹீரோயினாக ஸ்ரீதேவி தேர்வு செய்யப்பட்டார். தமிழ் மொழி மட்டும் இல்லாமல் இந்தி திரையுலகில் சென்ற ஸ்ரீதேவி அங்கும் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார்.


நடிகையாக உச்சத்தில் இருக்கும்போது தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்த ஸ்ரீதேவி, 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீதேவி - போனி கபூர் ஜோடிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் நடந்த உறவினர்கள் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீதேவி உயிரிழந்தார். அங்கு அவர் தங்கியிருந்த ஓட்டலின் குளியல் அறையில் இறந்த நிலையில் ஸ்ரீதேவி கிடந்தது பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. 


ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக ஊடகங்கள் கேள்வி எழுப்பினர். அவரது மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததால் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஸ்ரீதேவியின் உடற்கூராய்வு ஆய்வில், எதிர்பாராதவிதமாக குளியலறை தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி இறந்ததாகக் கூறப்பட்டிருந்தது. இந்த சூழலில் ஸ்ரீதேவி குறித்து தயாரிப்பாளரும் அவரது கணவருமான போனி கபூர் பேசியுள்ளார்.


சென்னையில் உள்ள ஸ்ரீதேவிக்கு சொந்தமான வீடு பற்றி பேசிய போனி கபூர், “சென்னையில் இருக்கும் ஸ்ரீதேவியின் வீடு எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது. அடிக்கடி வந்து தங்குவதற்காக அந்த வீட்டை முழுவதுமாக புதுப்பித்து வருகிறேன்.  ஸ்ரீதேவி இறந்த பிறகு எனது மகள்கள் சென்னைக்கு பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை.


ஏனென்றால் அவர்களுக்கு அங்கு நண்பர்கள் இல்லை, அவர்கள் மும்பையில் வளர்ந்தவர்கள். ஸ்ரீதேவி வீட்டில் இருக்கும் லிவ்விங் அறை மற்றும் எங்களின் அறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற அறைகள் மூடப்பட்டுள்ளன. இந்த வீட்டில் எங்களின் மகள்கள் குஷி மற்றும் ஜான்விக்கு இடம் உள்ளது. 


அந்த வீட்டில் பல நினைவுகள் உள்ளன. திருமணத்திற்கு முன்பும் பின்பும் நாங்கள் இருந்த தருணங்கள் நினைவுகளாய் வந்து செல்கின்றன. அங்கு அமர்ந்து ஸ்ரீதேவியை பார்த்து கொண்டிருக்கிறேன். இன்னும் ஸ்ரீதேவி இருப்பதை உணர்கிறேன்” எனப் பேசியுள்ளார்.


மேலும் படிக்க: Pradeep Anthony: பெண்கள் பற்றி வன்மமான கமெண்ட்... பிக்பாஸ் வீட்டின் ஆதிகுணசேகரனாக மாறும் பிரதீப் ஆண்டனி!


Thalaivar 170: 'ஜெய் பீம் ' இயக்குனர் ஞானவேல் படம்; ரஜினியை மறைமுகமாக எதிர்க்கும் வன்னியர் சங்கம்