கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பல்வேறு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிக்கு பிறகு, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 இன்று சீன மக்கள் குடியரசில் உள்ள ஹாங்சோ ஒலிம்பிக் விளையாட்டு மைய அரங்கில் நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. 

ஆசிய விளையாட்டு 2023 நிறைவு விழா இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு (IST) தொடங்குகிறது. விழாவின் நேரடி ஒளிபரப்பை இந்தியாவிலும் நேரடியாக பார்க்கலாம். 

எந்தெந்த நாடுகளில் எதில் நேரடியாக பார்க்கலாம்.. 

  • சீனா - சி.சி.டி.வி
  • ஜப்பான் - TBS
  • இந்தியா - Sony LIV (Sony Sports Network).
  • சிங்கப்பூர் - MediaCorp சேனல் 5 மற்றும் mewatch.sg
  • இந்தோனேசியா - MNCTV, RCTI, iNews TV மற்றும் Vision+
  • கொரியா குடியரசு - KBS, MBC, SBS மற்றும் TV Chosun
  • பிலிப்பைன்ஸ் - OneSports
  • மலேசியா - ஆர்டிஎம் மற்றும் ஆஸ்ட்ரோ

இதுவரை, இந்தியா வென்ற பதக்கங்கள் பட்டியல்: 

ஆசிய விளையாட்டு 2023 போட்டியில் இந்தியா இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.  16 தங்கம், 23 வெள்ளி மற்றும் 31 வெண்கலம் என 70 பதக்கங்களைக் குவித்த 570 பேர் கொண்ட இந்திய அணி, ஜகார்த்தாவில் 2018ம் ஆண்டு 70 பதக்கங்களை முறியடித்து புதிய சாதனை படைத்தது. 

விளையாட்டு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
துப்பாக்கி சுடுதல் 7 9 6 22
தடகளம் 6 14 9 29
வில்வித்தை 5 2 2 9
ஸ்குவாஷ் 2 1 2 5
கிரிக்கெட் 2 0 0 2
கபடி 2 0 0 2
பூப்பந்து 1 1 1 3
டென்னிஸ் 1 1 0 2
குதிரையேற்றம் 1 0 1 2
ஹாக்கி 1 0 1 2
படகோட்டுதல் 0 2 3 5
சதுரங்கம் 0 2 0 2
மல்யுத்தம் 0 1 5 6
குத்துச்சண்டை 0 1 4 5
படகோட்டம் 0 1 2 3
ப்ரிட்ஜ் 0 1 0 1
கோல்ஃப் 0 1 0 1
வுஷூ 0 1 0 1
ரோலர் ஸ்கேட்டிங் 0 0 2 2
கேனோ 0 0 1 1
செபக்டக்ராவ் 0 0 1 1
டேபிள் டென்னிஸ் 0 0 1 1
மொத்தம் 28 38 41 107

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா எத்தனையாவது இடம்..? 

ஹாங்சோவில் நான்கு நாடுகள் மட்டுமே 100 பதக்கங்களை வென்றுள்ளன. அதில், இந்தியா 4வது இடத்தில் உள்ளது. 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் 22 பதக்கங்களைக் குவித்தது, இதில் ஏழு தங்க பதக்கங்களும் அடங்கும். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா 200 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது, ஜப்பான் (51) மற்றும் கொரியா குடியரசு (42) என தங்க பதக்கங்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்தியா அதிகபட்சமாக 28 தங்க பதக்கங்களுடன் 4வது இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இதற்கிடையில் வில்வித்தை பிரிவில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று கெத்துகாட்டியது. அதேபோல், துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிகபட்சமாக 7 தங்க பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 

தரவரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 200 111 71 382
2 ஜப்பான் 51 55 69 186
3 தென் கொரியா 42 59 89 190
4 இந்தியா 28 38 41 107
5 உஸ்பெகிஸ்தான் 22 18 31 71
6 சீன தைபே 18 20 28 66
7 ஈரான் 13 21 19 53
8 தாய்லாந்து 12 14 32 58
9 பஹ்ரைன் 12 3 5 20
7 கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு 11 18 10 39