Highest Test Cricket Target: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மண்ணில் அதிகபட்ச இலக்கை சேஸ் செய்த அணி என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வென்ற அந்த அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 399 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதையடுத்து களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி, 90 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளி சேஸ் செய்யப்பட்ட, அதிகபட்ச இலக்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்திய மண்ணில் டெஸ்டில் அதிகபட்ச சேஸ்:
அணி | எதிரணி | இலக்கு | நடைபெற்ற இடம் | ஆண்டு |
இந்தியா | இங்கிலாந்து | 387 | சென்னை | 2008 |
மே. தீவுகள் | இந்தியா | 276 | டெல்லி | 1987 |
இந்தியா | மே. தீவுகள் | 276 | டெல்லி | 2011 |
இந்தியா | நியூசிலாந்து | 261 | பெங்களூரு | 2012 |
இந்தியா | ஆஸ்திரேலியா | 254 | மும்பை | 1964 |
இந்தியா | ஆஸ்திரேலியா | 216 | மொஹாலி | 2010 |
இங்கிலாந்து | இந்தியா | 207 | டெல்லி | 1972 |
இந்தியா | ஆஸ்திரேலியா | 207 | பெங்களூரு | 2010 |
இந்தியா | பாகிஸ்தான் | 203 | டெல்லி | 2007 |
ஆஸ்திரேலியா | இந்தியா | 194 | பெங்களூரு | 1998 |
இந்தியாவின் சாதனை தொடருமா?
இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச இலக்கை துரத்தி எட்டிய அணி என்ற பெருமையை இந்திய அணியே தக்கவைத்துள்ளது. அதன்படி, கடந்த 2008ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 387 ரன்களை எட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றது. சச்சினின் அபார சதத்துடன் யுவராஜ் சிங், சேவாக் மற்றும் கம்பீரின் அதிரடி ஆட்டம் மூலம் அந்த பிரமாண்ட வெற்றி சாத்தியப்பட்டது. அதோடு, இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களுக்கும் அதிகமான இலக்கை ஒரு அணி எட்டியது அதுவே முதலும் கடைசி முறை ஆகும். டாப் 10 சேஸிங்கில் இந்திய அணி 7 இடங்களை பிடித்துள்ளது. 1928ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிசிசிஐ வரலாற்றில் எந்தவொரு வெளிநாட்டு அணியும், இந்தியாவில் 300 ரன்களை டெஸ்ட் போட்டியில் சேஸ் செய்தது இல்லை.
மற்ற அணிகளின் அதிகபட்ச சேஸ்..!
இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெளிநாடுகளால் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு என்பது 276 ரன்கள் மட்டுமே. 1987ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி, டெல்லியில் நடைபெற்ற போட்டியில் 276 ரன்களை சேஸ் செய்து அசத்தியது. அதற்கடுத்தபடியாக 1972ம் ஆண்டு டெல்லி டெஸ்டில் இங்கிலாந்து அணி 207 ரன்களை சேஸ் செய்தது. தொடர்ந்து, 1998ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 194 ரன்களை சேஸ் செய்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்தியா வென்று, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மண்ணில் எந்தவொரு வெளிநாட்டு அணியும், 300 ரன்களை சேஸ் செய்தது இல்லை என்ற சாதனை தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.