திருச்சி: பிரபல ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது - போலீஸ் நடவடிக்கை

திருச்சி மாவட்டத்தில் சரித்திர பதிவேடு ரவுடியை சரமாரியாக வெட்டி கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது. காவல்துறை நடவடிக்கை.

Continues below advertisement

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக அனைத்து பகுதிகளிலும் தனிப்படை காவல் துறையினரை நியமனம் செய்து 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தி உள்ளார். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக குற்ற சம்பவங்கள் ஈடுபடுவது மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி பல்வேறு குற்றச்சம்பவங்களின் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Continues below advertisement

மேலும் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான கஞ்சா, புகையிலை, குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கையை தீவிரபடுத்தியுள்ளார்.


குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திறிபவர்களை கைது செய்து உரிய தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காவல்துறை சரித்திர பதிவேடுகளில் இருக்கக்கூடிய நபர்களை 24 மணி நேரமும் கண்காணித்து அவர்கள் மீண்டும் தவறான செயல் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி உட்கோட்டம், கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிக்க்ஷாண்டார்கோவில் பஞ்சாயத்து, நந்தா நகரில், ஸ்ரீரங்கம் சரித்திர பதிவேடு குற்றவாளி பரணிதரன் வயது 35, த.பெ. ஜம்புநாதன், தெற்கு தெரு, மேல கொண்டையன்பேட்டை திருச்சி ( ஜாதி- முத்துராஜா)  ஸ்ரீரங்கம் ROWDY HS No.-18/14, Category- A) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேற்படி பரணிதரனும், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சக்திவேல் (எ) ஆட்டோ சக்தி வயது 36, த.பெ. பால்ராஜ், பேரூர் அக்ரஹாரம், குழுமணி, திருச்சி (ஜாதி-சோழிய வெள்ளாளர், ஜீயபுரம் கா.நி-ROWDY HS No.- 404/22, Category-B) என்பவரும் சிறையில் இருந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, மேற்படி சக்திவேலின் மனைவி ஆர்த்தி என்பவர் தொலைபேசி மற்றும் நேரில் பரணிதரனை அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட பரணிதரன் மேற்படி ஆர்த்தியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.


இது சக்திவேலிற்கு தெரியவரவே,  பரணிதரன் மீது முன்விரோதம் கொண்டு, பகைமை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், மேற்படி (1) சக்திவேல் (எ) ஆட்டோ சக்தி, (2) பார்த்திபன் வயது 28, த.பெயாஸ்கரன், குழுமணி, திருச்சி, (3) தினேஸ்குமார் (எ) பொக்கைவாய் தினேஸ் வயது 25, மன்னார்சாமி, சிந்தாமணி, திருச்சி, (4)கோபாலகிருஷ்ணன் வயது 35, த.பெ. காசிநாதன், பாச்சூர், மணச்சநல்லூர், (5) தினேஸ்குமார் (எ) மயில் தினேஸ் வயது 24, த.பெ. மயில்ராஜ், மேலசிந்தாமணி, திருச்சி மற்றும் (6) முகில்குமார் (எ) முகில் வயது 30, த.பெ. சிவகுமார், சங்கரன் பிள்ளை சாலை, திருச்சி ஆகியோர்களுடன், 03.02.2024-ஆம் தேதி, காலை 10.15 மணிக்கு, டாடா போல்ட், TN 48 AH 0724 என்ற எண்ணுள்ள காரில் வந்து, இறந்தவரின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து, அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கியதில் பரணிதரனுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி, பிரேத கூராய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, கொலையுண்டு இறந்துபோன பரணிதரனின் மனைவி பிரதீபா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், கொள்ளிடம் காநி- குற்ற எண்- U/s 147, 148, 294(b), 449, 302  வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்களின் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு இன்றைய தினமே அனைத்து எதிரிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola