Director Ameer: விஜய்யின் அரசியல் வருகை காலத்தின் கட்டாயம் - இயக்குநர் அமீர் வரவேற்பு!

ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய்க்கு தொடர்ச்சியாக ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

Continues below advertisement

திரைத்துறையில் உச்ச நடிகராக உள்ள விஜய் அதை விட்டுட்டு அரசியல் செய்ய வருகிறேன் என சொல்வதை நாம் வரவேற்க வேண்டும் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை தொடங்கியுள்ளார். பிப்ரவரி 2 ஆம் தேதி ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய்க்கு தொடர்ச்சியாக ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இன்னும் 2 படங்களில் மட்டுமே நடிக்க உள்ளேன் என அவர் கூறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாலும் , மறுபக்கம் அரசியல் அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஆழ்த்தியுள்ளது. 

இப்படியான நிலையில், இயக்குநர் அமீர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார். இதுதொடர்பான நேர்காணலில் பேசியுள்ள அவர், “தமிழ்நாட்டில் தமிழராக, திரைக்கலைஞராக இருக்கக்கூடிய ஒருவர், திரைத்துறையில் உச்ச நடிகராக உள்ள ஒருவர், அதை விட்டுட்டு அரசியல் செய்ய வருகிறேன் என சொல்வதை நாம் வரவேற்க வேண்டும். மக்களின் அன்பை பெற்றவர்கள் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்பது நம் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. மக்களின் பாராட்டை, பணத்தை பெற்றவர்கள் அதனை திரும்ப அவர்களுக்கு செய்ய வேண்டும் என்பது தான் என்னைப் போன்ற திரைக்கலைஞர்கள் நீண்ட காலமாக சொல்லி வருகிறோம்.

விஜய்யை போன்றவர்கள் அரசியல் களத்தில் நின்று செய்யும் போது அது கூடுதல் பலம் பெறும். அவர் என்ன மாதிரியான அரசியல் செய்யப்போகிறார் என்பதில் இருந்து தான் எல்லாம் மாறுபடும். விஜய்யின் அரசியல் காலத்தின் தேவையாக இருப்பதாக நான் பார்க்கிறேன். 

என்னை போன்ற பலருக்கும் விஜய் நாடாளுமன்ற தேர்தலில் பங்கு பெற்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு பல நடிகர்கள் கட்சி தொடங்கினார்கள். இப்போது விஜய் தொடங்கியுள்ளார். இதில் கட்சி தொடங்காத ரஜினி, கமல்ஹாசன், விஜய் ஆகிய 3 பேரையும் குறிப்பிட வேண்டும்.  2017ல் ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிடும்போதும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன் என சொன்னார். இதையே விஜய்யும் சொல்லியிருக்கிறார். இது களத்தில் இருப்பவர்களுக்கு பின்னடைவாக அமையும். ரஜினியை இதில் சொல்ல காரணம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும்போது பாஜக தேர்தல் அறிக்கையை ஆதரித்தார். இங்கு தான் குழப்பம் ஏற்படுகிறது. 

2018ல் கட்சி ஆரம்பித்தார் கமல்ஹாசன். யாருடன் கூட்டணி இல்லை என்ன சொன்னார். எந்த பிரதமர் வேட்பாளர் ஆதரிக்கிறார் என சொல்லவில்லை. இப்போது அதே குழப்பத்துக்கு தான் விஜய் வந்து நிற்கிறார்” என பல விஷயங்களை இயக்குநர் அமீர் பேசியுள்ளார். 


மேலும் படிக்க: Thalapathy Vijay: அதை செய்தால் விஜய் அரசியலில் காணாமல் போய் விடுவார்.. நாஞ்சில் சம்பத் எச்சரிக்கை!

Continues below advertisement
Sponsored Links by Taboola